Job Alert : 39 பணியிடங்கள்; நகர்புற நலவாழ்வு மையங்களில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!
Job Alert : தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பவைகள் பற்றி காணலாம்.
பணி விவரம்:
மருத்துவ அலுவலர் (Medical Officer) -10
PHW / MultiPurpose HealthWorker (HealthInspector -Grade II) -10
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் -10
பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் - 9
மொத்த பணியிடங்கள் -39
கல்வித் தகுதி :
மருத்துவ அலுவலர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை மருத்துவர் படிப்பு (MBBS) முடித்திருக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயிரியல், தாவரவியல்,விலங்கியல் ஆகிய படிப்புகளை மேல்நிலை படிப்பில் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியைப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர்கள் மற்றும், தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல் நோக்கு சுகாதார பணியாளர்கள்பணியிடத்திற்கு 8 -ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஊதிய விவரம்:
- மருத்துவ அலுவலர் -ரூ.60,000
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் - ரூ.14,000
- பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்- ரூ.8,500
- பல்நோக்கு சுகாதார பணியாளர்கள்- ரூ.8,500
வயது வரம்பு:
மருத்துவ அலுவலர், சுகாதார உதவியாளர் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அரசு விதிகளுக்குட்பட்டது.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பவது அல்லது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/02/2023020740.pdf
கவனிக்க..
இந்தப் பணி எந்த காலத்திலும் நிரந்தரம் செய்யப்பட மாட்டது.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி
செயற் செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் ,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்அலுவலகம்
காந்திஜி ரோடு, எல்.ஐ.சி. அலுவலகம் அருகில்
தஞ்சாவூர் - 613 001
தொடர்புக்கு - 04362 -273503
விண்ணப்பிக்க கடைசி நாள் - 21.02.2023
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2023/02/2023020740.pdf - என்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..
UPSC IFS 2023 Notification: இந்திய வனத்துறை தேர்வு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!