Job Alert: பொறியியல் படித்தவரா? தமிழ்நாடு அரசு வழங்கும் தொழிற்பயிற்சி; முழு விவரம்!
Job Alert: பொறியியல் படித்தவர்களுக்கு மாத உதவியுடன் கூடிய தொழிற்பயிற்சி அறிவிப்பு குறித்த விவரம்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (TAMIL NADU MOTOR VEHICLE MAINTENANCE DEPARTMEN2T) மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் இணைந்து மாணவர்களுக்குச் மாத ஊதியத்துடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்குகிறது. இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
அரசின் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது எப்படி? யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி காணலாம்.
தொழிற்பயிற்சியின் விவரங்கள்:
Graduate Apprentices மற்றும் Technician (Diploma) Apprentices என்ற கிரேட்-1, கிரேட்-2 போன்ற பிரிவுகளில் அப்டரண்டீஸ் பயிற்சிகளை வழங்குகிறது.
மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவு பொறியியல் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
பயிற்சி காலம்:
இந்த வாய்ப்பு ஓராண்டு காலம் கொண்ட பயிற்சி ஆகும்.
கல்வித் தகுதி:
போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்பயிற்சி:
கிரேட்- பிரிவிற்கு ( Graduate Apprentices) 2020,2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முழு நேர பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கிரேட்-2 டெக்னீசியன் பிரிவுக்கு விண்ணப்பிக்க பொறியியல் அல்லது தொழில்நுட்ப பொறியியல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
1973 ஆம் ஆண்டு Apprenticeship Rules-ன் படி வயது வரம்பு முறை பின்பற்றப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாத உதவித்தொகை:
மெக்கானிகல் இன்ஜீனியரிங்/ ஆட்டோமொபல் இன்ஜீனியரிங் - ரூ. 9000
டிப்ளமோ- கிரேடு-2
மெக்கானிகல் இன்ஜீனியரிங்/ ஆட்டோமொபல் இன்ஜீனியரிங் - ரூ.8000 குறிப்பு:
ஏற்கனவே அரசு சார்ந்த தொழிற்பயிற்சி மேற்கொண்டவர்கள் மறுமுறை மீண்டும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக்கூடாது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தொழிற்பயிற்சிக்கு மாணவர்கள் கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளனர். விண்ணப்பதார்களில் தகுதியான மாணவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பு வெளியாகும்.
விண்ணப்பிக்கும் முறை:
மாணவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் என்ரோல் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே என்ரோல் செய்தவர்கள் லாக்கின் செய்து விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:
அன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 30.11.2022
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம் வெளியீடு 05.12.2022
அறிவிப்பின் முழு விவரம் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2022/10/TNMVMD_Notification_2022_23.pdf என்ற லிங்கை கிளிக் செய்து காணலாம்.