அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பு விழா!
அமெரிக்க நாட்டின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார்.அமெரிக்காவின் பொற்காலம் இப்போதே தொடங்குகிறது' என்று அறிவிக்கும் வேளையில், ஜனவரி 20, 2025 அன்று நாட்டின் விடுதலை தினம் என தனது உரையில் குறிப்பிட்டார்.
பதவியேற்பு விழா வழக்கமாக நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்பு நடைபெறும். வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தின் ரோட்டுண்டா அரங்குக்குள் நடைபெற்றது.
மெக்ஸிகோ வளைகுடாவை அமெரிக்கா வளைகுடாவாக மாற்றுவதாகவும் அறிவித்தார். எல்லைப் பகுதியில் தேசிய அவசர நிலை,
சட்டவிரோதமாக குடியேறி, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாக அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவதற்கு எதிராகவும் அவர் கையெழுத்திட்டார்.
அமெரிக்க விண்வெளி வீரர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப விரும்புகிறேன்.
பாரிஸ் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும்
உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் நடைமுறையை தொடங்குவதற்கான செயல் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
டிரம்ப் நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் கிடைக்கும் வரை அமெரிக்க ராணுவம் மற்றும் சில பிரிவுகள் தவிர மற்ற அனைத்து மத்திய ஆட்சேர்ப்பையும் நிறுத்திவைத்து டிரம்ப் உத்தரவிட்டார்.