பாங்க் ஆப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: டிகிரி இருந்தால் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் பரோடாவைத் தலைமையிடமாக்கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கி தான் பாங்க் ஆப் பரோடா. இந்தியா முழுவதும் 3082 கிளைகள் உள்பட தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் பாங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டுவருகிறது. இவ்வங்கியில் பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் தற்போது Data Scientist மற்றும் Data Engineer என சிறப்பு அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.
Data Scientist பணிக்கானத் தகுதிகள்:
Grade SMG/ S-IV – 1
சம்பளம்- மாதம் ரூபாய் 76,010 – 89890
வயது வரம்பு : 32 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Grade MMG/ S-III : 2
சம்பளம்- மாதம் ரூ. 63,840 – 78,230
வயது வரம்பு : 28 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
Grade MMG/ S-II - 6
சம்பளம் -மாதம் ரூ.48,170 – 69180
வயது வரம்பு : 25 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Data Engineer பணிக்கான தகுதிகள்:
Grade MMG/ S-III : 2
சம்பளம்- மாதம் ரூ. 63,840 – 78,230
வயது வரம்பு : 28 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
Grade MMG/ S-II – 4
சம்பளம் : மாதம் ரூ48 170 முதல் 69 ஆயிரத்து 180
வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
பாங்க் ஆப் பரோடா பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.bankofbaroda.in/careers.html என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
பொது மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூபாய் 600 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 100 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-16-03.pdf என்ற இணையதள முகவரியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.