மேலும் அறிய

வங்கிப்பணியில் சேர ஆசையா? SBI யில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. இதோ முழுவிபரம்!

எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ள பல்வேறு மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கியில் பல்வேறு பிரிவுகளில் மேலாளர், உதவி மேலாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கியாக எஸ்.பி.ஐ செயல்பட்டுவருகிறது. இவ்வங்கியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அவ்வப்போது வெளியாகும் நிலையில், தற்போது மேலாளர், உதவி மேலாளர் என 616 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் நாம்  இப்பணிக்கானத் தகுதிகள், விண்ணப்பிக்க கடைதி தேதி? என்ன என்பதுக்குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • வங்கிப்பணியில் சேர ஆசையா? SBI யில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. இதோ முழுவிபரம்!

மார்க்கெட்டிங் பிரிவில் மேலாளர் ஆவதற்கானத் தகுதிகள்: இப்பணிக்கு 12 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி :Marketing அல்லது Finance உள்ளிட்ட  பிரிவுகளில் MBA படித்திருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டு  பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 63,840 – 78,230 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மார்க்கெட்டிங் பிரிவில் உதவி மேலாளர் ஆவதற்கானத் தகுதிகள்:  மொத்தம் 26 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : Marketing அல்லது  Finance ஆகிய பிரிவில் MBA படித்திருக்க வேண்டும். இதோடு 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் – ரூபாய் 48,170 முதல் 69,810 என நிர்ணயம்.

Relationship Manager ஆவதற்கான தகுதிகள்: இப்பணிக்கு 314 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 23 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Relationship Manager (Team Lead) பணிக்கு மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளதாாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது : 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Customer Relationship Executive பணிக்கான தகுதிகள்:  217 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Investment Officer பணிக்கான தகுதிகள்: மொத்தம் 12 இடங்கள் காலியாக உள்ளது.

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.  மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது : 28 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Central Research Team (Product Lead): 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித் தகுதி : MBA படித்திருக்க வேண்டும். 5 ஆண்டு பணி முன்அனுபவம் அவசியம்.

வயது : 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Central Research Team (Product Lead): 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித் தகுதி : MBA படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது : 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Central research Team (Support): இப்பணிக்கு மொத்தம் 2 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி : இளங்கலை கணிதம் அல்லது வணிகவியல் அல்லது பொருளாதாரம் படித்திருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது : 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • வங்கிப்பணியில் சேர ஆசையா? SBI யில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்.. இதோ முழுவிபரம்!

 

விண்ணப்பிக்கும்முறை : வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், மேற்கண்ட தகுதியும் உள்ள நபர்கள் இந்த பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க வேண்டும் எனில்,  https://bank.sbi/careers  அல்லது  https://www.sbi.co.in/careers என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் Manager – Marketing மற்றும் Deputy Manager – Marketing பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வருகின்ற நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவை இரண்டையும் தவிர மற்றப் பணியிடங்களுக்கு  நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்டும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பணிகள் குறித்த கூடுதல் விபரங்களை,  https://sbi.co.in/documents/77530/11154687/270921-Advt.+SCO-15of2021-22.pdf/b2d4badf-9910-c82c-cf39-8dd6c43b757c?t=1632745940353 மற்றும் https://sbi.co.in/documents/77530/11154687/270921-Ad+No.-17.pdf/bb04f10b-9347-4576-69ec-c4eba6cc7ab9?t=1632745625542 என்ற இணையதள பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

வேலை வேண்டுமா? விருதுநகரில் பிரம்மாண்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 17!
வேலை வேண்டுமா? விருதுநகரில் பிரம்மாண்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 17!
செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
Chennai Job : கொத்தாக வரும் வேலைவாய்ப்பு.! குவியும் நிறுவனங்கள்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த தமிழக அரசு
கொத்தாக வரும் வேலைவாய்ப்பு.! குவியும் நிறுவனங்கள்.! மிஸ் பண்ணாதீங்க- தேதி குறித்த ஆட்சியர்
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
Maruti Brezza: நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
Embed widget