மேலும் அறிய

RRC Chennai: தெற்கு ரயில்வேயில் ஊக்கத் தொகையோடு தொழில் பழகுநர் பயிற்சி; 2,438 இடங்கள் - விண்ணப்பிப்பது எப்படி?

RRC Chennai:தெற்கு ரயில்வே அறிவித்துள்ள தொழில் பழகுநர் பயிற்சி விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்திய ரயில்வே துறையில் உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சியின் கீழ் 2,438 பணியிடங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பணி விவரம்

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அந்தமான், நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளுக்கு இந்த பயிற்சி அறிவிப்பு பொருந்தும். 

பணி அனுபவம் இல்லாதவர்கள், கோவை பணிமனை, பெரம்பலூர், பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனை, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு, அரக்கோணம், தாம்பரம், ராயபுரம், பொன்மலை, திருச்சிராப்பள்ளி, மதுரை, ஆவடி ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே பணிமனை, மருத்துவமனை ஆகிய அலுவலகங்களில் தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஃபிட்டர், வெல்டர், ஆய்வக டெக்னீசியன், ப்ளமர், கார்பெண்டர், பெயிண்டர், எலக்ட்ரிசியன், மெக்கானிக், வையர்மென் உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மொத்த பணியிடங்கள் - 2,438

கல்வித் தகுதி விவரம்:

ஃபிட்டர், வெல்டர், ஆகிய பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர் பணிக்கு 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற முறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஐ.டி.ஐ. பிரிவில் ஃபிட்டர், மெக்கானிஸ்ட், மோட்டர் வாகன மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 15 பூர்த்தியடைந்தவராகவும் 22 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மெடிக்கல் டெஸ்ட் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மெரிட் லிஸ்ட் தயாரித்து அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஊக்கத்தொகை:

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தொழில்பழகுநர் பயிற்சிக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். 

ஃபிட்டர் பிரிவில் இரண்டாடு காலம் தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படும். மற்ற பிரிவுகளில் ஓராண்டு முதல் ஓராண்டு மூன்று மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்:

தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். 

எப்படி விண்ணப்பிப்பது?

தெற்கு ரயில்வேயின் தொழில் பழகுநர் பயிற்சிக்கு  விண்ணப்பிக்க https://sronline.iroams.com/rrc_sr_apprenticev1/recruitmentIndex - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

பயிற்சி வழங்கப்படும் பிரிவுகள், அதற்கான தகுதிகள், ஊக்கத்தொகை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://sronline.iroams.com/rrc_sr_apprenticev1/notifications/Act%20Apprentices%20Notification%202024-25%20with%20enclosures.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.08.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
Rasi Palan Today, Sept 22: துலாமுக்கு எதிர்பாராத செலவு, விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: துலாமுக்கு எதிர்பாராத செலவுகள், விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்கள்: உங்கள் ராசிக்கான பலன்
Nalla Neram Today Sep 22: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
Rasi Palan Today, Sept 22: துலாமுக்கு எதிர்பாராத செலவு, விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: துலாமுக்கு எதிர்பாராத செலவுகள், விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்கள்: உங்கள் ராசிக்கான பலன்
Nalla Neram Today Sep 22: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
இன்ஸ்டா மோகம்! அரசு பேருந்து மீது ஏறி ரீல்ஸ்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் மாணவர்களின் அட்டகாசம்!
இன்ஸ்டா மோகம்! அரசு பேருந்து மீது ஏறி ரீல்ஸ்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் மாணவர்களின் அட்டகாசம்!
"இந்த துயரம் மாற்றமா மாறும்" பணிச்சுமையால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோரிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி!
Crime: 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேத்தியின் கணவர்!
Crime: 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேத்தியின் கணவர்!
Embed widget