Repco bank recruitment : ரெப்கோ வங்கியில் வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் உள்ளே..!
Repco bank recruitment 2022 : ரெப்கோ வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 50 ஜூனியர் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் பணிக்கு நியமிக்கப்படுவர். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 50 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. வேலைவாய்பு குறித்த விவரத்தை காணலாம்.
பணி விவரம்:
ஜூனியர் உதவியாளர்கள் (Junior Assistant/Clerk )
ஊதிய விவரம்:
இந்தப் பணிக்கு மாதம் ரூ.17,900 முதல் ரூ.47,920 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
30.09.2022 தேதியின்படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்புகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
ஜூனியர் உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட மாநில மொழி குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். வட்டார மொழிகளில் எழுதுதல், படித்தல், பேசுதல் ஆகியவற்றில் தேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு - தமிழ்
கேரளா- மலையாளம்
ஆந்திர பிரதேசம்- தெலுங்கு
கர்நாடகா - கன்னடம்
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் வழியில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அடுத்த மாதம் அல்லது அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
தேர்வு முறை:
தேர்வு மையங்கள்:
கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருவனந்தபுரம், விஜயவாடா, விசாகப்பட்டினம், பெங்களூரூ ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
பொதுப்பிரிவினர் ரூ.900-யும், பழங்குடியின/பட்டியலின பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோர் ரூ.500-யும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.repcobank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பின் விவரம் அறிய https://www.repcobank.com/uploads/career/Final%20Advertisement%202022.pdf
என்ற லிங்கை கிளிக் செய்ய்வும்.
முக்கியமான நாட்கள்:
விண்ணபிக்க கடைசி தேதி: 25.11.2022