(Source: ECI/ABP News/ABP Majha)
Railway Recruitment :: 35000 பணிவாய்ப்புகள்.. ரயில்வே தேர்வு முடிவுகள் எப்போது? கால அட்டவணையை வெளியிட்டது ரயில்வே...
Railway Recruitment : 35 ஆயிரம் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ரயில்வே தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த கால அட்டவணை வெளியாகி உள்ளது.
Railway Recruitment : 35 ஆயிரம் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ரயில்வே தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த கால அட்டவணை வெளியாகி உள்ளது.
புதுடெல்லி : போட்டித் தேர்வின் முடிவை வெளியிடுவதிலும், ஊழியர்கள் நியமனம் எந்த தேதிக்குள் முடிக்கப்படும் என்பதையும் முன்கூட்டியே தெரிவிக்கும் கால அட்டவனை நடைமுறையை ரயில்வே முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.
ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர்கள், கூட்ஸ் கார்டுகள், கமர்ஷியல் பிரிவு ஊழியர்கள், டிக்கெட் கிளார்க், சீனியர் கிளார்க் உள்ளிட்ட தொழில்நுட்பம் சாராத பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) நடத்தி உள்ளது.
Railways to provide appointment letters to over 35,000 applicants by March 2023
— ANI Digital (@ani_digital) November 17, 2022
Read @ANI Story | https://t.co/s2D14TpY30#Railway #Jobs #Recruitment pic.twitter.com/Qo538xDDTv
ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி மொத்தம் 35,281 பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக பணியிடங்களுக்கு பல கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 21 மண்டல தேர்வு வாரியங்களில் 17 மண்டலங்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. மீதமுள்ள மண்டலங்கள் விரைவில் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகளின் முடிவு, நியமனம் தொடர்பான அட்டவணையை ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, இதில் 5-ஆம் நிலைக்கான தேர்வு முடிவுகள் நவம்பவர் 3-வது வாரத்திற்குள் வெளியிடப்பட்டு, அடுத்த மாதம் 2-வது வாரத்துக்குள் சான்றிதழ் சரிபார்த்தலும், மருத்துவ பரிசோதனையும் முடிக்கப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் வாரத்திற்குள் பணியில் சேரலாம்.
3-ஆம் நிலை பணியிடங்களுக்கு மார்ச் முதல் வாரத்திற்குள் முடிக்கப்படும். அதேபோல் 2-ஆம் நிலை பணியாளர்களுக்கு மார்ச் மாதம் கடைசிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், 4-ஆம் நிலைக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 2-ஆம் வாரத்திற்குள் வெளியிடப்படும். பிப்ரவரி முதல் வாரத்திற்குள் சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை முடிக்கப்பட்டு, அதே மாதம் 4-வது வாரத்திற்குள் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள்.
3-ஆம் நிலை பணியிடங்களுக்ககான அனைத்து நடவடிக்கைகளும் மார்ச் முதல் வாரத்திற்குள் முடிக்கப்படும். 2ஆம் நிலை பணியிடங்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் அதே மாதம் 4-ஆம் வாரத்திற்குள் முடிவடையும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
Job Fair : மக்களே தவறவிடவேண்டாம்; மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; எங்கே? எப்போது? விவரம்!