Job Fair : மக்களே தவறவிடவேண்டாம்; மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; எங்கே? எப்போது? விவரம்!
Coimbatore job fair: கோயம்புத்தூரில் வரும் 27-ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பில் வரும் 27-ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை தேடும் இளைஞர்கள், புதிய பணி வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.
எங்கே நடைபெறுகிறது?
மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பொள்ளாச்சி.
இந்த கல்லூரி கோயம்புத்தூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
கல்லூரி செல்வதற்கான வழி கூகுள் மேப் - https://goo.gl/maps/ebnegFuDsV7ncJGS9
பங்குபெறும் நிறுவனங்கள் :
இந்த வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தி துறை, ஜவுளித்துறை, பொறியியல், கட்டுமானம், ஐ.டி துறை(தகவல் மற்றும் தொழில்நுட்பம் துறை), ஆட்டோமொபைல்ஸ், விற்பனை துறை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
இந்த முகாம் மூலம் 15,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நல்ல செய்தி என்னவென்றால், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகள் அளிக்கும் நிறுவனங்கள் இதில் கலந்து கொள்வதாகவும் கூறப்படுள்ளது.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.
என்னென்ன தேவை:
இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் (Bio-Data) செல்ல வேண்டும்.
இம்முகாமில் பங்கேற்பவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் , அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பபங்கள் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் கூடுதலாக பதிவு செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 27.11.2022 (ஞாயிற்றுக் கிழமை ) காலை 9 மணி முதல்
தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை சார்பில் நடத்தப்படும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளப்பட்டுள்ளது.