Group C Recruitment 2025: அரசு வேலை வேண்டுமா ? 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்...! உடனே APPLY பண்ணுங்க
குரூப்-சி பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (Puducherry VA Recruitment 2025) வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள குரூப்-சி பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு (Puducherry VA Recruitment 2025) வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கான தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்களை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.
பணியின் விவரங்கள்
கிராம உதவியாளர் : 54 பணியிடங்கள்
பல்துறை பணியாளர் (சட்ட அளவீட்டுத்துறை) : 9 பணியிடங்கள்
மொத்தம் : 63 பணியிடங்கள்
இப்பணியிடங்கள் பொது பிரிவில் - 26, எம்பிசி - 12, எஸ்சி - 10 , ஒபிசி - 7, பொருளாதாரத்தில் பின்தங்கியவர் பிரிவு - 6, பிசி - 2, முன்னாள் ராணுவத்தினர் பிரிவு - 5 மற்றும் விளையாட்டு வீரர்கள் - 3 என நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள குரூப்-சி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 14.06.2025 தேதியின்படி 30 வயதைக் கடந்திருக்கக்கூடாது. இதில் எம்பிசி, ஒபிசி, பிசி, பிசிஎம் ஆகிய பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி பிரிவினருக்கு 5 வருடங்கள் தளர்வு உள்ளது. மாற்றுத்திறனாளிகள், ஆதாரவற்ற பெண்கள் 35 வயதை வரை விண்ணப்பிக்கலாம். அதில் எஸ்சி பிரிவினர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்களும் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
கிராம உதவியாளர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாட்டில் 3 மாதங்கள் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பல்துறை பணியாளர் (சட்ட அளவீட்டுத்துறை) பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், இரண்டு பதவிகளுக்கும் 14.06.2025 தேதியின்படி கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
புதுச்சேரி அரசில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கிராம உதவியாளர் பணிக்கு மட்டுமே கணினி திறன் தேர்வு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கொண்டு 2 மணி நேரத்தில் நடத்தப்படும். இதில் பொதுப் பிரிவில் 30 % மதிப்பெண்கள், எஸ்சி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 20% மதிப்பெண்களும், இதர பிரிவினர் 25% மதிப்பெண்களும் பெற வேண்டும். கிராம உதவியாளர் பணிக்கு கணினி திறன் தேர்வு 40 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள குரூப்-சி பதவிகளுக்கு https://recruitment.py.gov.in/ என்ற இணையதளத்தில் ஆனலின் வழியாக விண்ணப்பிகக் வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது. அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 14.06.2025, 3 மணி வரை. எழுத்துத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்
புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள கிராம உதவியாளர் மற்றும் பல்துறை பணியாளர் ஆகிய குரூப்-சி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பத்தின்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு 0413 - 2299567 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.





















