புதுச்சேரி மின் துறையில் வேலை வாய்ப்பு: கட்டுமான உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!
புதுச்சேரி மின்துறையில் 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேதி 26-ந் தேதி மாலை 3 மணி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மின்துறையில் 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மின்துறையில் காலியாக உள்ள 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்பவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனது, இந்த பணியிடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.
கட்டுமான உதவியாளர் பணி
இது குறித்து மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசு மின்துறையில் காலியாக உள்ள 177 கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும். இதற்கு விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் எலக்ட்ரீஷியன், வயர்மேன் டிரேடு -2 மற்றும் கிராப்ட்ஸ்மேன்ஷிப் சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 18 முதல் 32 வயது உடையவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இடஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை https://recuritment.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம் 13-09-2025 காலை 10 முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி வருகிற 19-09-2025 ந்தேதி மாலை 3 மணி ஆகும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, 22-09-2025 ந்தேதி மாலை 3 மணிக்குள் மின்துறை கண்காணிப்பு பொறியாளர், மின்துறை அலுவலகம், என்.எஸ்.சி. போஸ் சாலை, புதுச்சேரி-605001 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பு
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 13-ந் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக நேற்று மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் தேதி 26-ந் தேதி மாலை 3 மணி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் விண்ணப்ப நகலை 29-ந் தேதி மாலை 3 மணிக்குள் கண்காணிப்பு பொறியாளர், மின் துறை அலுவலகம், என்.எஸ்.சி., போஸ் ரோடு, புதுச்சேரி 605001 என்ற முகவரியில் சமர்பிக்க வேண்டும் என புதுச்சேரி மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















