Job Alert: 12-வது, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு; கூடுதல் விவரம் இதோ!
Puducherry LDC Recruitment 2022: புதுச்சேரியில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரம்
Puducherry LDC Recruitment 2022:
புதுச்சேரியில் Department of Personnel and Administrative Reforms-PW துறையில் காலியாக உள்ள 220 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு விண்ணப்பிக்க வரும் 29-ஆம் தேதியே கடைசி நாளாகும்.
பணி விவரம்:
Lower Division Clerk -165
Store Keeper Grade III - 55
மொத்த பணியிடங்கள் -220
கல்வித் தகுதி:
கிளர்க் பணிகளுக்கு விண்ணப்பிக்க 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதோடு டெக்னிக்கல் தகுதியான டைப்ரைட்டிங் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஸ்டோர் கீப்பர் கிரேட்-3 பணிக்கு பத்தாவது, 12-ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 32 வயது உள்ளவராக இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பில் தெளிவாக உள்ளது.
ஊதிய விவரம்:
இந்தப் பணிக்கு Level-2 -இன்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க https://recruitment.py.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, திறன்றிவு தேர்வுஉடற்தகுதி தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2022
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://recruitment.py.gov.in/recruitment/LDCSK2022/notification என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் வாசிக்க..
DRDO Recruitment: டி.ஆர்.டி.ஓ.வில் 1061 பணியிடங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி..?