8,000 பேருக்கு வேலை.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- இளைஞர்களுக்கு ஜாக்பாட்
Job vacancy : வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 8ஆயிரம் பேருக்கு வேலை வழங்கிடும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பை உருவாக்கும் தமிழக அரசு
வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தமிழகத்தில் தனியார் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் அனைத்து தொழில் நிறுவனங்களும் தொடங்காமல் பல்வேறு மாவட்டங்களிலும் தொழில் முதலீடுகள் விரிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒரே இடத்தில் வேலைவாய்ப்பு குவிந்து கிடக்காமல் பரவலாக வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. எனவே சொந்த ஊரிலேயே வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
அந்த வகையில் தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் துறை வேலைவாய்ப்புகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் 8ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க நல்லதொரு வாய்ப்பு அமைந்துள்ளது. தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்
நாள் : 08.11.2025 சனிக்கிழமை
நேரம் : காலை 9.00 மணி - மதியம் 3.00 மணி
இடம் : தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி, தேனி
வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் இல்லை, அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
125 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்.
8000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பம் வழங்குதல்.
கல்வித்தகுதிகள்
எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐ.டி.ஐ/டிப்ளமோ/நர்சிங்/பார்மஸி /பொறியியல் படிப்பு
வயது வரம்பு:
18 வயது முதல் 40 வயது வரை
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளம் https://www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்வது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















