வரும் 30ம் தேதி மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 20 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப இருக்காங்க!!!
தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்ட வாரியாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

கடலூரில் வரும் 30-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது இதில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்களில் 20 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனால தனியார் நிறுவனங்களில் வேலைத் தேடும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவங்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பு. மிஸ் பண்ணீடாதீங்க.
தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்ட வாரியாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. லோட்டஸ் இண்டர்நேஷனல் பள்ளி, பெண்ணாடம் என்ற இடத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.
முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இதன் மூலம் 20 ஆயிரத்திற்கு அதிகமாக காலிப்பணியிடங்கள் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு செய்து தரப்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்ய வழிகாட்டுதல் வழங்கப்படும். இவைமட்டுமின்றி இல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் பணி வாய்ப்பு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி என்ன தெரியுங்களா?
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் கலந்துகொள்ளலாம். குறிப்பாக ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு தொழிற்சார்ந்த பணி வாய்ப்புகள் உள்ளதால் அவர்களும் கலந்துகொள்ளலாம்.
என்னென்ன ஆவணங்கள் கொண்டு வரணும்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சுயக்குறிப்பு உள்ளிட்ட ஆகியவற்றின் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதார்கள் User ID, Password உருவாக்கிக் கொள்ள தங்களது கைபேசிக்கு வரும் OTPஐ பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளவும். மீண்டும் User ID, Password-ஐ பயன்படுத்தி உட்சென்று தங்களுடைய கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கடலூர் மாவட்டம் மற்றும் 04142-290039, 9499055908 என்று தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். பள்ளிக் கல்வித்தகுதி அல்லது பட்டப்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு பணி வாய்ப்பை பெறலாம்.





















