Power Grid Recruitment: டிகிரி படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு; மாதம் ஒரு லட்சம் ஊதியம்; விண்ணப்பிப்பது எப்படி?
Power Grid Recruitment:பவர் கிரிட் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.
மத்திய எரிசக்தி துறையில் கீழ் செயல்பட்டுவரும் மகாராஷ்டிரா பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (Power Grid Corporation of India Limited (POWERGRID)) அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
Junior Officer Trainee (HR)
மொத்த பணியிடங்கள் - 46
கல்வி மற்றும் பிற தகுதிகள்;
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பி.பி.ஏ., பி.பி.எம்., பி.பி.எஸ்., அல்லது அதற்கு சமமான பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60 சதவீதம் அளவுக்கு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அதோடு, முதுகலை, டிப்ளமோ படித்தவர்களும் அல்லது இதற்கு இணையான உயர்க்கல்வி பெற்றவர்களும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-2023 ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்து அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
ஊதிய விவரம்:
இதற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு பயிற்சி காலத்தின்போது மாதம் ரூ.27,500 வழங்கப்படும்.
பயிற்சி காலம் முடிந்த பிறகு, ரூ.25,000 முதல் ரூ.1,17,500 ஆக மாத ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு கிடைக்கப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வுக்கு அழைப்படுவர். ஆன்லைன் தேர்வு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்;
இதற்கு கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.powergrid.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.powergrid.in/sites/default/files/inline-files/Detailed_Advertisement_for_the_post_of_JOT_HR_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.