![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
NHAI-ல் 34 காலிப்பணியிடங்கள்.. ஆர்வமுள்ள பட்டதாரிகள் மார்ச்.24-க்குள் விண்ணப்பிக்க மறந்திடாதீங்க!
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனம் தான் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.
![NHAI-ல் 34 காலிப்பணியிடங்கள்.. ஆர்வமுள்ள பட்டதாரிகள் மார்ச்.24-க்குள் விண்ணப்பிக்க மறந்திடாதீங்க! NHAI recruitment for various manager post interesting candidate apply soon! NHAI-ல் 34 காலிப்பணியிடங்கள்.. ஆர்வமுள்ள பட்டதாரிகள் மார்ச்.24-க்குள் விண்ணப்பிக்க மறந்திடாதீங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/21/7daded8c0b2fa7ab490a7bae9a873289_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனம் தான் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது பல்வேறு பிரிவுகளில் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் என்னென்ன தகுதி கொண்டிருக்க வேண்டும்? என இங்கே அறிந்துகொள்வோம்.
NHAI பணியிடங்களுக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 34
துறை வாரியாக காலிப்பணியிட விபரங்கள்:
தலைமை பொதுமேலாளர் ( Finance) – 1
துணை மேலாளர் (Legal)- 1
துணை பொது மேலாளர் (Media relation) -1
மேலாளர் ( Tech) – 31
கல்வித்தகுதி:
மேற்பட்ட பதவிகளைப்பொறுத்து கல்வித்தகுதியானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தலைமை பொது மேலாளர் (நிதி) – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணக்கு நிதி, ICAI அல்லது ICWAI ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
துணை மேலாளர் ( சட்டம்) – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் சட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
துணை மேலாளர் ( மீடியா ரிலேசன்) -விண்ணப்பதாரர்கள் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்கவேண்டும். இதோடு அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலைபட்டம், டிப்ளமோ பத்திரிக்கை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது அதற்கு சமமானதாக படித்திருக்க வேண்டும்.
மேலாளர் ( தொழில்நுட்பம்)- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 56 என நிர்ணயம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் அப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தை சரியாகப் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
DGM ( HR& Admn)
IA, National Highways authority of india,
Plot No: G – 5&6, Sector – 10,
Dwarka, New Delhi – 110075.
விண்ணப்பிக்க கடைசி தேதி – மார்ச் 24, 2022.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்களின் தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தலைமை பொது மேலாளர் (நிதி) – ரூ.37,400 – 67,000
துணை மேலாளர் ( சட்டம்) – ரூ.15,600- 36,100
துணை மேலாளர் ( மீடியா ரிலேசன்) – ரூ.15,600- 36,100
மேலாளர் ( தொழில்நுட்பம்)- ரூ.15,600- 36,100
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Advertisement_1.pdf மற்றும் https://nhai.gov.in/#/vacancy-detail/%2F9XPuJJxA7Ww1MPVaX1sHQ%3D%3D என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)