(Source: ECI/ABP News/ABP Majha)
NVS Recruitment: ரூ.2 லட்சம் மாத ஊதியம்; நவோதயா வித்யாலயா சமிதி பள்ளி வேலைவாய்ப்பு- முழு விவரம்!
NVS Recruitment: நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் (Navodaya Vidyalaya Samiti School) காலியாக உள்ள பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
துணை ஆணையர் ( Deputy Commisioner - Finance)
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதய வித்யாலயா சமிதி பள்ளியில் Deputation முறையில் பணிசெய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுகிறது. நிதி துறையில் துணை ஆணையர் பணியிடம் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மத்திய / மாநில / Statuary / Autonomous நிறுவனங்களில் Pay Level -12 ல் ஊதியம் வாங்குபவர்கள், 5 ஆண்டுகள் 11- லெவல் ஊதியம் வாங்குபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
15,டிசம்பர், 2023-ன் படி, விண்ணப்பத்தாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி காலம்
இது மூன்றாண்டு கால பணியாகும். (தேவையெனில்)
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.78,800- ரூ. 2,09,200 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். இ-மெயில் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Deputy Commissioner Admin,
Navodaya Vidyalaya Samiti,
B-15,Institutional Area, Sector-62,
Noida
Gautam Budh Nagar (U.P.) - 201309
இ-மெயில் முகவரி - applications.nvs@gmail.com
இந்த வேலைவாய்ப்பு குறித்து முழு விவரங்களுக்கு https://navodaya.gov.in/nvs/en/Recruitment/Notification-Vacancies/# - என்ற இணைப்பி க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எஸ்.பி.ஐ. வேலைவாய்ப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 'Circle Based Officers' அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Circle Based Officers
மொத்த பணியிடங்கள் - 5280
தமிழ்நாடு, பாண்டிச்சேரி வட்டத்தில் மட்டும் 125 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, லடாக், தமிழ்நாடு,புதுச்சேரி, தெலங்கானா, மேற்கு வங்காளம்,சிக்கிம்,. அசாக்ம், மிசோரம். திரிபுரா. பீகார், கேரளா, ஜெய்பூர், புதுடெல்லி, லக்னோ, கொல்கத்தா, மும்பை, சண்டிகர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கி கிளைகளில் இந்த வேலைவாய்ப்பின் மூலம் தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி மற்றும் தகுதிகள்
இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவம், பொறியியல், பட்ட கணக்கர், Cost Accountant ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 30.10.2024 முதல் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை:
இதற்கு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கு 6 மாதம் Probation காலம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்
விண்ணப்ப கட்டணம்
ஊதிய விவரம்
( ரூ.36000-1490/7-46430-1740/2- 49910-1990/7-63840 applicable to Junior Management Grade Scale-I plus )
விண்ணப்பிப்பது எப்படி?
பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள முகவரியான https://sbi.co.in/ அல்லது
https://www.sbi.co.in/web/careers/current-openings - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள - 022-22820427 ( 11:00 AM and 05:00 PM வங்கி வேலைநாட்களில்) மின்னஞ்சல் முகவரி - http://cgrs.ibps.in
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://sbi.co.in/documents/77530/36548767/212223-Final+Advertisement.pdf/3a3945e6-d8ee-fc51-8992-99d0ff942541?t=1700564748917 - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.12.2023
ஆன்லைன் தேர்வு நடைபெறும் உத்தேசிக்கப்பட்ட தேதி - ஜனவரி 2024