MIT Jobs : பிரபல அரசு பல்கலைக்கழகத்தில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்புகள்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
MIT Jobs : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பின் விவரம்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் தொழில்நுட்பம் வளாகம் மற்றும் உடற்கல்வியியல் துறை ஆகியவற்றில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான தகுதிகள் என்னென்ன, விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்டவைகளை கீழே காணலாம்.
பணி விவரம் :
Applied Sciences and Humanities துறையில் உள்ள உதவியாளார் பணியிடங்கள் நிலை, 1,2,3 என்பதன் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
தொழில்நுட்ப உதவியாளார் (professional Assistant-I ,
professional Assistant-II , professional Assistant-III )
கல்வித் தகுதி :
- professional Assistant-I பணிக்கு கம்யூட்டர் அறிவியல் துறையில் இளங்கலை பொறியியல் படித்திருக்க வேண்டும்.
- நிலை - 2 பணியிடத்திற்கு வேதியியல், இயற்பியல் துறையில் எம்.எஸ்.சி. படித்திருக்க வேண்டும்
- நிலை-3 பணியிடத்திற்கு பொறியியல் துறையில் மூன்றாண்டு டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- professional Assistant-I - ரூ.821 / நாளொன்றுக்கு
- professional Assistant-II - ரூ.771 / நாளொன்றுக்கு
- professional Assistant-III - ரூ.699 / நாளொன்றுக்கு
இந்தப் பணியிடத்திற்கான வயது வரம்பு குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவர்?
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு அதில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தினைப் பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். அஞ்சல் அனுப்பும்போது கவரின் மீது ’application for the post of Professional Assistant - I, II, III Department of Applied Science and Humanities, MIT Campus,’ என்று அவசியம் குறிப்பிட்ட வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி :
The Dean,
Madras Institute of Technology Campus,
Anna University, Chrompet,
Chennai - 600 044
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.02.2023 மாலை 5 மணி வரை
----------
உடற்கல்வியியல் துறை வேலைவாய்ப்பு:
பணி மற்றும் இதர தகுதிகள்:
- தொழில்நுட்ப உதவியாளர் (professional Assistant-I ,professional Assistant-II )
- உதவியாளர்
- அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி:
- தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு இளங்கலை பொறியாளர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
- தொழில்நுட்ப உதவியாளர் நிலை பணியிடத்திற்கு எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., எம்.ஏ. அல்லது எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும்.
- உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
- professional Assistant-I - ரூ.821 / நாள் ஒன்றிற்கு
- professional Assistant-II - ரூ.771 / நாள் ஒன்றிற்கு
- உதவியாளர் - ரூ.486 / நாள் ஒன்றிற்கு
- அலுவலக உதவியாளர் - ரூ.424 / நாள் ஒன்றிற்கு
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu - என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் அனைத்து சான்றிதழ்கள் நகல்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
விண்ணப்பம் அனுப்பும் போஸ்டல் கவரின் மீது பணி "Application for the Post of Professional Assistant-I/II, Clerical Assistant/Peon" என்று குறிப்பிட்ட அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Chairman, Anna University Sports Board,
Anna University, Chennai - 600 025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.2.2023
மேலும் விவரங்களுக்கு www.annauniv.edu என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
Applied Sciences and Humanities துறை அறிவிப்பு -https://www.annauniv.edu/pdf/Non-Teaching%20(DW)%20-%20DASH%20%20-%20Application.pdf
உடற்கல்வியியல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் - https://www.annauniv.edu/pdf/Advt.%20for%20Non-Teach.-%20AUSB.pdf