Jobs : மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு; மிஸ் பண்ணாதீங்க..! இதை செக் பண்ணுங்க..
இந்தியா முழுவதும் உள்ள நேர்காணல் செயல்முறைக்கான கல்வி/தகுதியின் அடிப்படையில் பல்வேறு பதவிகளுக்கான சமீபத்திய வேலை காலியிடங்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
இந்தியா முழுவதும் உள்ள நேர்காணல் செயல்முறைக்கான கல்வி/தகுதியின் அடிப்படையில் பல்வேறு பதவிகளுக்கான சமீபத்திய வேலை காலியிடங்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகமானது (Ministry of Home Affairs), லேண்ட் போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் (Land Ports Authority of India - LPAI) குரூப் ஏ, பி மற்றும் சி ஆகியவற்றுக்கான பல பதவிகளுக்கு விண்ணப்பங்களை பெறப்படுவதாக அறிவித்துள்ளது.
முக்கியப் பணியிடங்கள்
அண்டர் செகரெட்டரி - 1
செக்ஷன் ஆஃபீசர் – 2
ப்ரைவேட் செகரெட்டரி – 1
அசிஸ்டண்ட் இன்ஞினியர் (எலக்ட்ரிகல்) – 1
அசிஸ்டண்ட் இன்ஞினியர் (சிவில்) – 1
அசிஸ்டண்ட் – 1
செகரெட்டரி அக்கவுண்டண்ட் – 2
ஜுனியர் இன்ஞினியர் (சிவில் & எலக்ட்ரிகல்) – 2
பெர்சனல் அசிஸ்டண்ட் – 3
அக்கவுண்டண்ட் – 1
மேனேஜர் – 9
அசிஸ்டண்ட் – 6
ஸ்டெனொக்ரப்ஹெர் க்ரெட் – 6
விண்ணப்பிக்க கடைசி நாள்
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்க்கு விசிட் செய்யலாம். மேலும் ஆர்வமுள்ளவர்கள் இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் ஜூன் 24, 2022 வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்திய நில துறைமுக ஆணையம் (LPAI) என்பது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மற்றும் இந்திய நிலத் துறைமுக ஆணையச் சட்டம், 2010 மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இந்த அமைப்பு இந்தியாவின் எல்லைகள் முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் பல ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகளை (Integrated Check Posts - ICPs) நிர்வகிக்கும் பணியைச் செய்து வருகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள காலி பணியிடங்களின் விவரங்களை சரிபார்க்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் MHAன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் ஹோம் பேஜில் உள்ள ‘vacancies’ டேபை தேட வேண்டும். பின் vacancies செக்ஷனில் இருக்கும் புதுடெல்லி LPAI செயலகத்தில் உள்ள ‘குரூப் ‘A’, ‘B’ & ‘C’ பணியிடங்களை நிரப்புவதற்காக கொடுக்கப்பட்டு உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும். காலி பணி இடங்கள் குறித்த அனைத்து விவரங்களும் PDF டாக்குமெண்ட் வடிவில் கிடைக்கும்.
செகரட்டரி, செக்ஷன் ஆஃபீசர், பிரைவேட் செகரட்டரி, அசிஸ்டன்ட் இன்ஜினியர் (எலெக்ட்ரிக்கல்), அசிஸ்டன்ட் இன்ஜினியர் (சிவில்), அக்கவுண்டன்ட், சீனியர் அக்கவுண்டன்ட், பர்சனல் அசிஸ்டன்ட், ஜூனியர் இன்ஜினியர் (சிவில் & எலெக்ட்ரிக்கல்) உள்ளிட்ட போஸ்ட்டின் கீழ் 15 பணிகளில் காலியிடங்கள் உள்ளன. இவை தவிர ஒருங்கிணைந்த சோதனை சாவடிகளில் (Integrated Check Posts), மேனேஜர், அசிஸ்டன்ட் மற்றும் ஸ்டெனோகிராஃபர் கிரேடு-டி போன்ற 34 பணியிடங்கள் காலியாக உள்ளன.