மேலும் அறிய

JOB FAIR: "வேலை வேண்டுமா" - இதோ.... வாய்ப்பை தவறவிடாதீர்கள்....!

மயிலாடுதுறையில் தனியார் நிறுவனங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20-ம் தேதி நடைபெற உள்ளது.

மயிலாடுதுறையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் மயிலாடுதுறை இணைந்து தனியார் நிறுவனங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20-ம் தேதி நடந்த உள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாம் 

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தனியார்துறையில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் யூனியன் கிளப் மயிலாடுதுறை இணைந்து மயிலாடுதுறையில் உள்ள யூனியன் கிளப்பில் 20.12.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை குறு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்ட உள்ளது.

NEET Exam Online: இனி கணினி முறையில் நீட் தேர்வு? மத்திய அமைச்சர் பரபரப்பு பேட்டி!


JOB FAIR:

500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் 

இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் உட்பட பிற மாவட்டங்களில் இருந்து 25-க்கும் மேற்ப்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்காக 500-க்கு மேற்ப்பட்ட வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டத்திலும் காலியாகும் நாம் தமிழர் கட்சியின் கூடாரம் - அதிமுகவில் இணைந்த நாதகவினர்...!

முகாமில் கலந்துகொள்ள தகுதிகள் 

மேலும் இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட, 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உட்பட இதர பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். மேலும் இம்முகாமில் திறன் பயிற்சி, சுயதொழில் தொடங்க வங்கி கடன் வசதி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசு போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

அதிமுக ஐ.டி.பிரிவு இணை செயலாளரை கைது செய்ய இடைக்காலத் தடை! - நீதிபதி விதித்த நிபந்தனை

முகாமிற்கு எடுத்துவர வேண்டிய ஆவணங்கள் 

எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறவும், மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளுர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

R Ashwin: "முரளிதரனுக்கு அடுத்து அஸ்வின்தான்" கிரிக்கெட்டை கட்டியாண்ட மாயாஜால சுழல் சக்கரவர்த்தி!

மேலும் விவரங்களுக்கு தொடர் எண்

எனவே தனியார்துறை நிறுவனங்களில் வேலைதேடும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
SBI PO Vacancy 2026: ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம் – முழு விவரங்கள் இங்கே
SBI PO Vacancy 2026: ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம் – முழு விவரங்கள் இங்கே
புதுச்சேரிக்கு வருகிறது பிரம்மாண்ட ஐ.டி. பூங்கா...! குவியப்போகிறது வேலைவாய்ப்பு...
புதுச்சேரிக்கு வருகிறது பிரம்மாண்ட ஐ.டி. பூங்கா...! குவியப்போகிறது வேலைவாய்ப்பு...
SBI PO Recruitment 2026: 1,500 புரொபேஷனரி ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
SBI PO Recruitment 2026: 1,500 புரொபேஷனரி ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DVAC Raid: ஸ்டாலினின் தளபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 13 இடங்கள், தவெக அரசின் முதல் அதிரடி
ஸ்டாலினின் தளபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 13 இடங்கள், தவெக அரசின் முதல் அதிரடி
DMK BJP: திமுகவை சூப்பர் என பாராட்டி ஆந்திராவில் இருந்து தூது..! NDAவில் இணைக்க பாஜக போடும் கணக்கு
திமுகவை சூப்பர் என பாராட்டி ஆந்திராவில் இருந்து தூது..! NDAவில் இணைக்க பாஜக போடும் கணக்கு
TN Govt: ஷாக் அடிக்குமா மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை? டார்கெட் செந்தில் பாலாஜி? TVK அரசிடம் சிக்குவது யார்?
ஷாக் அடிக்குமா மின்சாரத்துறை வெள்ளை அறிக்கை? டார்கெட் செந்தில் பாலாஜி? TVK அரசிடம் சிக்குவது யார்?
MK Stalin: உசுப்பேற்றிய விஜய்.. கொதித்த திமுகவினர்.. மீண்டும் சட்டமன்றம் வரும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: உசுப்பேற்றிய விஜய்.. கொதித்த திமுகவினர்.. மீண்டும் சட்டமன்றம் வரும் மு.க.ஸ்டாலின்!
TVK IT Wing: வாயைத் திறந்தாலே பால்டாயில் வாடை.. உதயநிதியை மீண்டும் வம்பிழுத்த தவெக!
TVK IT Wing: வாயைத் திறந்தாலே பால்டாயில் வாடை.. உதயநிதியை மீண்டும் வம்பிழுத்த தவெக!
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
Embed widget