மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்திலும் காலியாகும் நாம் தமிழர் கட்சியின் கூடாரம் - அதிமுகவில் இணைந்த நாதகவினர்...!

சீமானுக்கு மேலும் அதிர்ச்சி தரும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகி அதிமுகவின் தங்களை இணைத்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சியில் வீசும் புயல்

நாம் தமிழர் கட்சி தலைமையில் அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சியில் புயல் வீசி வருகிறது. மேலும் காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் ஆகியோர் குறித்து சீமான் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரங்கள் அக்கட்சியில் புயலை கிளப்பியுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்திலும் காலியாகும் நாம் தமிழர் கட்சியின் கூடாரம் - அதிமுகவில் இணைந்த நாதகவினர்...!

காலியான மாவட்டங்கள் 

இதனையடுத்து அணி அணியாக கட்சியை விட்டு கிளம்பி வருகின்றனர் சீமானின் தம்பிகள். அந்த வகையில், சீமான் மீது அதிருப்தியில் இருந்த கிருஷ்ணகிரி பிரபாகரன், விழுப்புரம் வடக்கு சுகுமார், விழுப்புரம் மேற்கு பூபாலன், விழுப்புரம் மத்திய மணிகண்டன், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி, திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் வெளியேறினர். 


மயிலாடுதுறை மாவட்டத்திலும் காலியாகும் நாம் தமிழர் கட்சியின் கூடாரம் - அதிமுகவில் இணைந்த நாதகவினர்...!

மேலும், திருச்சி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி அமைப்பின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் நகர துணை தலைவர் பொறுப்பிலிருந்து ஜீவானந்தம் ஆகியோர் விலகினர். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள், நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் கண்ணன், இளைஞர் பாசறை நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் பார்வின், குருதி கொடை பாசறை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோனி விஜய் உட்பட 30 நிர்வாகிகள் கூண்டோடு விலகினர்.


மயிலாடுதுறை மாவட்டத்திலும் காலியாகும் நாம் தமிழர் கட்சியின் கூடாரம் - அதிமுகவில் இணைந்த நாதகவினர்...!

நெல்லை, கோவை, சேலம், கிருஷ்ணகிரியை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியில் இருந்து தர்மபுரி மாவட்ட முக்கிய பொறுப்பாளர்கள் விலகியுள்ளனர். அரூர் சட்டமன்ற தொகுதி தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், அரூர் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, அரூர் தொகுதி துணை செயலாளர் வேடியப்பன், ஒன்றிய பொருளாளர் நிவாஸ், கிளை பொறுப்பாளர் அரவிந்தன், ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் சிவமூர்த்தி, தொகுதி இணைச்செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் பசுபதி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வி, கோகிலா உள்ளிட்ட பலர் விலகி உள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முக்கிய நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


மயிலாடுதுறை மாவட்டத்திலும் காலியாகும் நாம் தமிழர் கட்சியின் கூடாரம் - அதிமுகவில் இணைந்த நாதகவினர்...!

மயிலாடுதுறையிலும் கட்சி தாவல் 

இந்நிலையில் சீமானுக்கு மேலும் அதிர்ச்சி தரும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். நாம் தமிழர் கட்சி சட்டமன்ற செயலாளர் ஜவகர் நெடுஞ்செழியன் தலைமையில் நகர செயலாளர் நகர பொறுப்பாளர் மேற்கு ஒன்றிய செயலாளர் உட்பட 30 -க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி இருந்ததால் அக்கட்சியிலிருந்து விலகி மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் மார்கோனி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வந்த பொறுப்பாளர்களுக்கு அதிமுக துண்டு அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து அதிமுகவிற்கு நற்பெயர் ஏற்படுத்தும் விதமாக சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Embed widget