Recruitment | நேர்காணல் மட்டுமே..மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளர் பணி.. உடனே விண்ணப்பிக்கவும்!
Madurai Kamaraj University Job Vacancy: நேர்காணலில் பங்கேற்றும் நபர்களுக்கு போக்குவரத்து செலவிற்கான பணம் வழங்கப்படும் எனவும், தேர்வாகும் நபர்கள் எடுக்கும் வகுப்புகளின் அடிப்படையிலேயே சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madurai Kamaraj University Recruitment 2022: மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரியில் காலியாக உள்ள சிறப்பு விரிவுரையாளர் (Guest lecturer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான நேர்காணல் வருகின்ற பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெறுவதால் தகுதியுள்ளவர்கள் கலந்துகொள்ளவும்.
மதுரையில் கடந்த 1996-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம். தென் தமிழகத்தில் 18 பாடசாலைகளையும், 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்தப் பல்கலைக்கழகமானது 109 இணைக்கப்பட்ட கல்லூரிகள் உள்பட 7 மாலைநேரக்கல்லூரிகளைக் கொண்டு இயங்கிவருகிறது. இங்கு கிராமப்புற மாணவர்கள் முதல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதோடு பல்வேறு துறைகளில் தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் என பலர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் பணியாற்றுவதற்கான சிறப்பு விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு எவ்வித தேர்வும் நடத்தப்படாது எனவும் நேர்காணல் முறையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , என்ன தகுதி தேவை? என்பது குறித்து இங்கே அறிந்துகொள்வோம்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக சிறப்பு விரிவுரையாளர் பணிக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள் – 8
Commerce- 2
English – 2
History -2
Mathematics - 2
கல்வித்தகுதி :
மதுரை காமராசர் பல்கலைக்கழக சிறப்பு விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், உங்களது கல்வித்தகுதி, பெயர் போன்ற அனைத்து தகவல்களையும் சரியாகப்பூர்த்தி செய்ய வேண்டும்.
பின்னர் பணிக்கு தேவைப்படும் அனைத்து அடிப்படை சான்றிதழ்கள் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் வருகின்ற பிப்ரவரி 21-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Dr.C.Muniyandi,
Director i/c,
MKU Evening College
Theni
Mobile no: 9159151671.
மின்னஞ்சல் – munismku@gmail.com
விண்ணப்பக்கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் (Direct Interview) நடத்தப்படும்.
நேர்காணல் நடைபெறும் தேதி – 23.02.2022
நேர்காணல் நடைபெறும் நேரம் – மாலை 3 மணி.
நேர்காணல் நடைபெறும் இடம் –
MKU Evening College Govt. Hr. Sec. School Campus,
Theni - 625 531.
நேர்காணலில் பங்கேற்றும் விண்ணப்பதாரர்களுக்கு போக்குவரத்து செலவிற்கான பணம் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு தேர்வாகும் நபர்கள் எடுக்கும் வகுப்புகளின் அடிப்படையிலேயே சம்பளம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://mkuniversity.ac.in/new/notification_2022/advitisement%20for%20EVC%20THENI%20Final.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.