KVB Job Vacancy : பிரபல தனியார் வங்கியில் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
KVB Job Vacancy : கரூர் வைஸ்யா வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து முழு விவரம்!
கரூர் வைஸ்யா வங்கியில் வேலைவாய்ப்பு:
கரூர் வைஸ்யா வங்கியானது, இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் வங்கியாகும். தமிழ்நாட்டின் கரூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் காலியாக உள்ள ’Business Development Executive (CASA) ‘ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
Liabilities Sales Channel பிரிவில் காலியாக உள்ள ’Business Development Executive (CASA) ‘பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளதாக கரூர் வைஸ்யா வங்கி அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
’Business Development Executive (CASA) ‘
கல்வித் தகுதி :
- குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விற்பனைப் பிரிவில் ஆர்வம் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் எழுத, படித்த தெரிந்திருக்க வேண்டும்.
- பணி அனுபவம் இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- பணி சார்ந்த பயணங்கள் மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு வங்கியில் கொள்கை, திறமை அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். மருத்துவ காப்பீடு உள்ளிட்டவைகளும் வழங்கப்படும்.
வயது வரம்பு :
இதற்கு அதிகபட்சமகா 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
கரூர் வைஸ்யா வங்கியின் இணையதளமான Karur Vysya Bank - KVB- https://www.kvb.co.in/- க்கு செல்லவும்.
’Career ‘என்பதை தேர்வு செய்யவும்.
அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை படித்து தெரிந்த பின்னர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். கடைசி தேதியான பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க - https://www.kvblimited.com/psc/kvbcg/EMPLOYEE/HRMS/c/HRS_HRAM_FL.HRS_CG_SEARCH_FL.GBL?FOCUS=Applicant&SITEID=1&Page=HRS_APP_SCHJOB&Action=U&FOCUS=Applicant&SiteId=1
விண்ணப்பித்த பின்னர், விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
விண்ணப்பங்கள் குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள, கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்; அல்லது https://www.kvb.co.in/ லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.
தேர்தெடுக்கப்படும் முறை:
இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2023
அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு https://drive.google.com/file/d/15Lnvty-77ZvPITfCWlkks42XC20FrCrU/view-என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.
கவனிக்க..
விண்ணப்பதாரர்கள் தங்களது தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை சரியாக கொடுக்கவும்.
நேர்காணலுக்கான அழைப்பு மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ
இதையும் படிக்கலாமே..
CUET UG 2023: மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர வேண்டுமா?- விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி..