மேலும் அறிய

CUET UG 2023: மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர வேண்டுமா?- விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி..

மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12 கடைசித் தேதி ஆகும்.

மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.

பொது நுழைவுத் தேர்வு 

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் யு.ஜி.சி. சார்பில் வெளியிடப்பட்டது.  

அதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (க்யூட் தேர்வு) மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  இளநிலை படிப்புக்கான பொது  நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி, நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மார்ச் 12ஆம் தேதி வரைபொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வர்களின் எண்ணிக்கை மற்றும் பாடங்களின் தெரிவுகளைப் பொறுத்து, 3 ஷிஃப்டுகளாகத் தேர்வுகள் பல நாட்களுக்கு நடைபெறும். தேர்வர்கள் https://cuet.samarth.ac.in என்ற இணைய முகவரியில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், 011 - 40759000 / 011 - 69227700 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம். cuet-ug@nta.ac.in என்ற இ- மெயில் முகவரியையும் தொடர்பு கொள்ளலாம் என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்தார்.

CUET UG 2023: மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர வேண்டுமா?- விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி..

பிளஸ் 2 மதிப்பெண்கள் முக்கியமில்லை

இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது என்று ஏற்கெனவே யுஜிசி தெரிவித்து இருந்தது.

தேர்வு முடிவுகள் எப்போது?

இளநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகளை ஜூன் 3 ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகளை ஜூலை மாதத்திலும் வெளியிட யுஜிசி திட்டமிட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க யுஜிசி திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

தேர்வர்கள் விண்ணப்பிக்க: https://cuet.samarth.ac.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.

கூடுதல் விவரங்களுக்கு: 011 - 40759000 / 011 - 69227700

இ- மெயில் முகவரி: cuet-ug@nta.ac.in

இதையும் வாசிக்கலாம்: 10th Tamil Question Bank: 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் எளிதாக சதம் அடிக்கலாம்; மாதிரி வினாத்தாள் இதோ! https://tamil.abplive.com/education/tn-10th-tamil-question-bank-with-answers-2023-tamil-nadu-sslc-important-questions-tamil-subject-101574

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
அரசுப் பள்ளிகளில் 18ஆயிரம்+ காலி இடங்கள்; மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசமா?
அரசுப் பள்ளிகளில் 18ஆயிரம்+ காலி இடங்கள்; மாணவர்களின் எதிர்காலத்தில் சமரசமா?

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? - வானிலை அறிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
iPhone 17 Discount: மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
Embed widget