இந்திய ரயில்வேயில் 6180 டெக்னீசியன் வேலைகள்: விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 28! உடனே விண்ணப்பியுங்கள்!
Railway Jobs: "இந்தியன் ரயில்வேயில் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் மூலம் டெக்னீசியன் பிரிவில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன"

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6180 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலையில்லா பிரச்சனை
இந்த காலகட்டத்தில் படித்த படிப்புக்கு வேலை இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஆனாலும் கிடைக்கும் வேலையில் கிடைக்கும் துறையில் சாதிக்க முடியும் என பல உதாரணங்கள் இருந்து தான் வருகின்றன.
பெரும்பாலானோர் அரசு வேலைகளை விரும்புகின்றனர். அரசு வேலைகள் என்றாலே, வேலை பாதுகாப்பு இருக்கும் என்பதுதான் அதன் முக்கிய அம்சமாக இருக்கிறது. அந்தவகையில் உலகில் மிக பெரிய பொதுத்துறையாக பார்க்கப்படும், இந்திய ரயில்வேயில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வேயில் காலி பணியிடங்கள் - Indian Railway Jobs
இந்திய ரயில்வேயில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டெக்னீசியன் கிரேட் 3 , டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்), ஆகிய இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
எவ்வளவு காலியிடங்கள்
டெக்னீசியன் கிரேடு மூன்று பிரிவில் 6000 வேலை வாய்ப்புகள் உள்ளன. டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்) பிரிவுக்கு 180 இடங்கள் உள்ளன. மொத்தம் 6 ஆயிரத்து 180 இடங்கள் காலியிடங்களாக உள்ளன.
கல்வித் தகுதி என்ன தேவைப்படுகிறது
கிரேட் மூன்று பிரிவு: பத்தாம் வகுப்பு/ பன்னிரண்டாம் வகுப்பு/ ஐ.டி.ஐ., ஆகிய கல்வித் தகுதிகள் வரவேற்கப்படுகின்றன
கிரேட் கிரேடு 1 (சிக்னல்) : பி.எஸ்.சி., கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
வயது வரம்பு என்ன ?
28.07.2025 படி வயதுவரம்பு 18 வயதில் இருந்து 30 வயது குள்ளாக இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக மூன்று ஆண்டுகள் இருக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி ? -How to Apply Online
இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கப்பட வேண்டும். rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கட்டணங்கள் பொது பிரிவினருக்கு 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு 250 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்ச்சி செய்யும் முறை எப்படி ?
ஆன்லைன் மூலம் தேர்வு தேர்வு நடத்தப்படும். அதன் பிறகு மருத்துவ சோதனை நடத்தப்படும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வேலை கொடுக்கப்படும்.
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய தேதி
ஜூலை மாதம் 28ஆம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.





















