FSSAI ல் கொட்டிக்கிடக்கும் வேலை.... நவ.12க்குள் விண்ணப்பிக்கலாம்!
FSSAI சான்றிதழ் இல்லாமல் எந்தவித உணவுப்பொருள்களையும் நாம் மக்களிடம் கொண்டு விற்பனை செய்யமுடியாது.
இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்று தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம். இதன் மூலம் பாதுகாப்பான உணவுகளை ஆய்வு செய்து மக்களுக்கு வழங்க நடவடிக்கை மற்றும் அதற்குரிய தரச்சான்றிதழை வழங்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மேலும் FSSAI சான்றிதழ் இல்லாமல் எந்தவித உணவுப்பொருள்களையும் நாம் மக்களிடம் கொண்டு விற்பனை செய்யமுடியாது. அந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆணையத்தின் கீழ் உணவு ஆய்வாளர், உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணியில் சேர்வதற்கானத் தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்காள்வோம்.
உணவு ஆய்வாளர் பணிக்கானத் தகுதிகள் (Food Analyst)
காலிப்பணியிடங்கள் : 4
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master’s degree in Chemistry or Biochemistry or Microbiology or Dairy Chemistry or Food Technology, Food and Nutrition or Bachelor of Technology in Dairy or Oil or degree in Veterinary Sciences படித்திருக்க வேண்டும். இதே துறையில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தொழில்நுட்ப அலுவலர் பணிக்கானத் தகுதிகள் (Technical Officer)
காலிப்பணியிடங்கள்: 125
கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master Degree from a recognized University or Institution in Chemistry or Biochemistry or Food Technology or Food Science & Technology or Food & Nutrition or Edible Oil Technology or Microbiology or Dairy Technology or Agricultural or horticultural Sciences or Industrial Microbiology or Toxicology or Public Health or Life Science or Biotechnology or Fruit & Vegetable Technology or Food Safety & Quality Assurance படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மத்திய உணவு பாதுகாப்பு அலுவலர் பணிக்கானத் தகுதிகள் (Central Food Safety Officer)
காலிப்பணியிடங்கள் :37
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் Degree in Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or Veterinary Sciences or Bio-Chemistry or Microbiology or Master’s Degree in Chemistry or degree in medicine படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவி மேலாளர் – தகவல் தொழில்நுட்பம் பணிக்கானத் தகுதிகள் (Assistant Manager (IT))
காலிப்பணியிடங்கள் : 4
கல்வித் தகுதி : B. Tech or M. Tech in Computer Science or IT முடித்திருக்க வேண்டும். இதோடு சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு பணி அனுபவம் இருப்பது அவசியம்..
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவி மேலாளர் பணிக்கானத் தகுதிகள்: (Assistant Manager)
காலிப்பணியிடங்கள் :4
கல்வித் தகுதி : Post Graduate Degree or Diploma in journalism or Mass communication or Public Relation or Social Work or psychology or Labour and Social Welfare. இதோடு 2 ஆண்டு பணி முன்அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவியாளர் பணிக்கானத் தகுதிகள் (Assistant)
காலிப்பணியிடங்கள் : 33
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதேப்போன்று ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர், தனி உதவியாளர், தகவல் தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர் என பல்வேறு பணியிடங்களுக்கும் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://fssai.gov.in/jobs@fssai.php என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தின் மூலம் ஆன்லைனில் நவம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு ரூ.1500 விண்ணப்பக்கட்டணமாகவும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள சில பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://fssai.gov.in/upload/uploadfiles/files/DR_04_Advt_02_10_2021.pdf என்ற இணையதள பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.