சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புகள்! லேட் செய்யாம உங்க விண்ணப்பத்தை உடனே அனுப்பிடுங்க
தற்காலிகமாக ஒப்பந்த முறையில் மருத்துவ அலுவலர்கள் ஆலோசகர்கள், தொழில்முறை சிகிச்சையாளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்தா மருத்துவ அலுவலகத்தின் கீழ் காலியாக உள்ள 18 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பம் வரும் 28-ம் தேதி வரை பெறப்படுகிறது. எனவே லேட் செய்யாம உங்க விண்ணப்பத்தை உடனே அனுப்பிடுங்க.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட அளவில் உள்ள பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சித்த மருத்துவ அலுவலகம், துணை இயக்குநர் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆசாரிப்பள்ளம் அலுவலகத்தில் NHM மற்றும் NAM திட்டத்தின் கீழ் உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பை மாவட்ட நல்வாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்காலிகமாக ஒப்பந்த முறையில் மருத்துவ அலுவலர்கள் ஆலோசகர்கள், தொழில்முறை சிகிச்சையாளர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
இதன்படி ஆலோசகர் (ஆயுர்வேதம்) 2
ஆலோசகர் (யுனானி) 1
ஆலோசகர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) 2
ஆயுஷ் மருத்துவ அலுவலர் (ஹோமியோபதி) 1
ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) 1
ஆக்பேஷனல் தெரபிஸ்ட் 1
கவுன்சிலர் (RMNCH Scheme) 1
சிகிச்சை உதவியாளர் (ஆண் மற்றும் பெண்) 6
பல்நோக்கு உதவியாளர் 3
என மொத்தம் 18 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு ஜூலை 1-ம் தேதியின்படி, 18 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆக்பேஷனல் தெரபிஸ்ட் மற்றும் கவுன்சிலர் ஆகிய பதவிக்கு மட்டும் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆலோசகர் பதவிகளுக்கு BAMS, BUMS, BNYS ஆகிய பட்டப்படிப்புகளுடன் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆயுஷ் மருத்துவ அலுவலர் பதவிக்கு BHMS, BSMS ஆகியவற்றில் மருத்துவப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் கன்வுசிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஆக்பேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு அதற்கான இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கவுன்சிலர் பதவிக்கு சமூகப் பணி, பொது நிர்வாகம், உளவியல், சமூகவியல், வீட்டு அறிவியல், மருத்துவமனை மேனேஜ்மெண்ட் ஆகியவற்றில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புடன் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நன்கு பேசும் மற்றும் எழுதும் திறன் அவசியம். கணினி திறன் அவசியம். சிகிச்சை உதவியாளர் பதவிக்கு அதற்கான டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு தமிழ் தெரிந்திருந்திருந்தால் போதுமானது. படிக்கும் மற்றும் எழுதும் திறன் அவசியமாகும்.
ஆலோசகராக தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம், மருத்துவ அலுவலர்களாக தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.34,000 வழங்கப்படும். ஆக்பேஷனல் தெரபிஸ்ட் - ரூ.23 ஆயிரம், கவுன்சிலர் - ரூ.18 ஆயிரம், சிகிச்சை உதவியாளர் - ரூ.15 ஆயிரம் மற்றும் பல்நோக்கு உதவியாளர் - ரூ.10 ஆயிரம் என மாத சம்பள நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இருப்பினும் மாவட்ட சுகாதார சங்க தலைவரின் முடிவே இறுதி ஆகும். பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும். விண்ணப்பதார்கள் அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள், பிறப்பு சான்றிதழ், அடையாள சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வகுப்பு பிரிவு சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அலுவலகத்திற்கு சென்றோ அல்லது தபால் வழியாக அனுப்பி வைத்து விண்ணப்பிக்கலாம்.





















