மலேசியாவில் வேலை வாய்ப்பு! QC இன்ஸ்பெக்டர், பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
மலேசிய நாட்டில் க்யூசி இன்ஸ்பெக்டர், திட்டமிடல் இன்ஜினியர், பைப்பிங் ஃபோர்மேன் பணிகளுக்கு 24இல் இருந்து 42 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர்: மலேசியா நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் க்யூசி இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இதில் பங்கேற்று வேலை வாய்ப்பை பெறலாம். எனவே மிஸ் பண்ணிடாதீங்க...
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மலேசிய நாட்டில் க்யூசி இன்ஸ்பெக்டர், திட்டமிடல் இன்ஜினியர், பைப்பிங் ஃபோர்மேன் பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்று மூன்று முதல் ஐந்தாண்டு பணி அனுபவம் பெற்ற 24 இருந்து 42 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
க்யூசி இன்ஸ்பெக்டர் பணிக்கு மாதம் ரூ.70,000 - 80,000 சம்பளம், பைப்பிங் இன்ஜினியர் பணிக்கு மாதம் ரூ.70,000 - 80,000 சம்பளம், பைப்பிங் இன்ஜினியர் பணிக்கு ரூ 60,000 - 80,000 சம்பளம், திட்டமிடல் இன்ஜினியர் பணிக்கு ரூ 70,000 - 84,000 சம்பளம், டெண்டரிங் இன்ஜினியர் பணிக்கு ரூ. 70,000 - 76,000 சம்பளம், பைப்பிங் ஃபோர்மேன் பணிக்கு ரூ.54,000 - 62,400 சம்பளம் வழங்கப்படும்.
இதேபோன்று டிஐஜி மற்று ஏஆர்சி வெல்டர்கள், சிஎஸ் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதம் ரூ.42,000-50,000 சம்பளம் வழங்கப்படும். பைப் பிட்டர் பணிக்கு மாதம் ரூ.38,000 - 50,000 சம்பளம் வழங்கப்படும்.
உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதுமானது.
இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு இன்று 18.6.2025ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 32 என்ற முகவரிக்கு செல்லலாம்.
மேலும் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் தகுதியுள்ளவர்கள் இதை மிஸ் செய்திடாதீங்க வெற்றிகள் கிடைக்கட்டும்.





















