Job Fair: தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வேலைவாய்ப்பு முகாம்! எங்கெல்லாம் நடக்கிறது? முழு விவரம்
Job Fair: மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெரம்பலூர், ராமநாதபுரம்,விழுப்புரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, கரூர் மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 23-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
கலைஞர் நூற்றாண்டு விழா
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவான கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநிலம் முழுவதும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
பெரம்பலூர், ராமநாதபுரம்,விழுப்புரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நாளை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
- இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள். பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.
- இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in - என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
- வேலைதேடும் இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம்.
பெரம்பலூர் வேலைவாய்ப்பு முகாம்
CHRISTAIN MATRIC HIGHER SECCONDARY SCHOOL,
SANTHAM,NAGAR,
ARUMADAL PIRIVU ROAD,
ARIYALUR MAIN ROAD,
PEREAMBALUR.
இராமதநாதபுரம் வேலைவாய்ப்பு முகாம்
பரமக்குடி நகராட்சி மையப் பகுதியில் அமைந்துள்ள ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
விழுப்புரம் வேலைவாய்ப்பு முகாம்
அரசு சட்டக் கல்லூரி,
விழுப்புரம்.
புதிய பேருந்து நிலையம் அருகில்.
புதுக்கோட்டை வேலைவாய்ப்பு முகாம்
செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வருகிற 23.12.2023 (சனிக்கிழமை) காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.
செங்கல்பட்டு வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்பட்டும்.
கரூர் வேலைவாய்ப்பு முகாம்
தான்தோன்றிமலை அரசு கலை கல்லூரியில் நடைபெற உள்ளது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காஞ்சிபுரம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணிதம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களை செவித்திறன் குறையுடையோருக்கான மாணவ/மாணவியர்களுக்கு பயிற்றுவிக்க மாதம் ரூ.15,000/- மதிப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு கீழ்காணும் கல்வித் தகுதியுடன் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும் வாசிக்க..