Job Fair: வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; தேனியில் நாளை வேலைவாய்ப்பு - முழு விவரம் உள்ளே
வரும் 16.12.2022 அன்று தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் பிரதி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வேலைவாய்ப்பு முகாம் வரும் 16.12.2022 வெள்ளிக்கிழமை அன்று தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள் மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ , பட்டயப் படிப்பு மற்றும் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகள், பொறியியல் பட்டப் படிப்புகள் படித்தவர்கள் மற்றும் தையல்பயிற்சி முடித்தவர்கள் ஆகிய பல்வேறு கல்வித்தகுதியில் உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம்.
இனிமேல் தான் உதயா என்ற நண்பன், உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை.... நடிகர் விஷால் கூறியது என்ன?
எனவே வேலைநாடுநர்கள் தங்களது சுயவிபர நகல் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்கலுடன் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் 16.12.2022 அன்று நடைபெறும் . வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04546 – 254510 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, இவ்வாய்ப்பினை தேனி மாவட்ட வேலைநாடுநர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்