மேலும் அறிய

+2 தேர்ச்சியா? மத்திய அரசு பணிக்கு 5000 காலிப்பணியிடங்கள்; இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..

மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக மார்ச் 7 ஆம் தேிக்குள் விண்ணப்பிக்கவும்.

இந்திய அரசுப்பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித்தேர்வுகளின் வாயிலாக தேர்வு செய்ய ஏற்படுத்தப்பபெற்ற அரசு சார்ந்த அமைப்பு தான் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்( staff selection Commission). ஒரு தலைவரும், இரண்டு செயலாளர்களையும் கொண்டு இத்துறை செயல்பட்டுவருகிறது. தற்போது மத்திய அரசின் பல்வேறு துறை ரீதியான அமைச்சகங்கள், அலுவலகங்கள் மற்ம் அரசியல் சட்ட அமைப்புகள், சட்டரீதியான அமைப்புகள் , நீதிமன்றத்தில் போன்றவற்றில் எல்டிசி, இளநிலை அமைச்சக உதவியாளர், அஞ்சல் உதவியாளர், தபால் பிரிவு உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் என சுமார் 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை? தேர்வு செய்யும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

  • +2 தேர்ச்சியா? மத்திய அரசு பணிக்கு 5000 காலிப்பணியிடங்கள்; இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..

மத்திய அரசில் பல்வேறு பணிக்களுக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள்: 5000

பணியிடங்கள் மற்றும் சம்பள விபரங்கள்:

Lower Division clerk (LDC) Junior Secretariat assistant 

சம்பளம்:  ரூபாய் 19,900-63,200/-

Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

சம்பளம்: மாதம் ரூபாய் 25,500-81,100

 Data Entry Operator (DEO)

சம்பளம்: மாதம் ரூபாய் 29,200-92,300

Data Entry Operator, Grade ‘A’

சம்பளம்: ரூபாய் 25,500-81,100 என நிர்ணயம்.

கல்வித்தகுதி:

மேற்கண்ட அனைத்துப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 01.01.2022 தேதியின்படி 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்துத் தகுதிகளும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற மார்ச் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ஆன்லைன் வாயிலாக வருகின்ற மார்ச் 8 ஆம் தேதிக்குள்  ரூ. 100 விண்ணப்பக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட  முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை உடனடியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_01022022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget