Job Alert : இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. ரூ. 1 லட்சம் வரை சம்பளம்...எப்படி விண்ணப்பிக்கலாம்...?
இந்திய விமான நிலைய ஆணையம் (ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2022), 53 காலிப் பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2022க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று ஜூனியர் அசிஸ்டெண்ட், சீனியர் அசிஸ்டெண்ட் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள் சம்பளம் மற்றும் பிற தகவல்களை பற்றி அறிய, கிழே படித்து விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
பணி குறித்த கூடுதல் விவரம்
காலி பணியிடங்கள்
ஜூனியர் அசிஸ்டெண்ட் (மொழி) - 05
ஜூனியர் அசிஸ்டெண்ட் (பைனான்ஸ்) - 16
ஜூனியர் அசிஸ்டெண்ட் (எலக்ட்ரானிக்ஸ்) - 32
மேற்கண்ட பணிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Recruitment_notification_of_AAI_NR.pdf
கல்வித்தகுதி
- ஜூனியர் அசிஸ்டெண்ட் (மொழி) பணிக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி சார்ந்த படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஜூனியர் அசிஸ்டெண்ட் (பைனான்ஸ்) பணிக்கு B.Com படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 முதல் 6 மாதங்கள் கணினி பயிற்சி வகுப்பு முடிந்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
- ஜூனியர் அசிஸ்டெண்ட் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு Diplomo in Electronics/Telecommunication/Radio Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
வருமானம்
இந்த மேற்கண்ட பணிகளுக்கு ரூ.36,000 முதல் 1,10,000 வரை வருமானமானது இருக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Recruitment_notification_of_AAI_NR.pdf
வயது விவரம்
இந்த மேற்கண்ட பணிகளுக்கு வயதானது 30க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
- முதலில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்ல வேண்டும். https://www.aai.aero/en என்ற இணையத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- இணையத்தில் நுழைந்ததும், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஆட்சேர்ப்பு 2022 அறிவிப்பை பார்க்கவும்.
- அதில் ஜூனியர் அசிஸ்டெண்ட் என்ற கிளிக் செய்ய வண்டும்
- தேவையான அனைத்து விவரங்களை நிரப்ப வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தை கடைசி தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பித்துவிடவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 20-ஆம் தேதி கடைசி நாள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Recruitment_notification_of_AAI_NR.pdf
மேலும் படிக்க
Jobs: மாசம் 60 ஆயிரம் வரை சம்பளத்தில் அரசு வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் உள்ளே...!