விளையாட்டில் ஆர்வமா? 10ம் வகுப்பு பாஸா? உங்களுக்கு வேலை ரெடியா இருக்கு..! இதுதான் விவரம்!!
Life Guards பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நீச்சல் பழகியதுக்குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவசர காலத்தில் முதலுதவி மேற்கொள்வது குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Life Guards பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கவும், அனைத்து இடங்களிலும் விளையாட்டுகளைப் பரப்பவும் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக இந்திய அரசின் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் கடந்த 1984 ஆம் ஆண்டு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தொடங்கப்பட்டது. இங்கு வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாக தகுதியானப் பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது Life Guards பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
இந்திய விளையாட்டு ஆணையத்தில் Life Guards பணியிடங்களுக்கானத் தகுதிகள்:
கல்வித்தகுதி:
இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர தகுதி:
நீச்சல் பழகியதுக்குறித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதோடு டிரைவிங் மற்றும் அவசர காலத்தில் எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் என்பது குறித்த தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதிற்கு மேல் இருப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய விளையாட்டு ஆணையத்தின் கீழ் பணிபுரிய ஆர்வமுள்ள நபர்கள், https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1638857149_Advertisement.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை முதலில் டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள பெயர், கல்வித்தகுதி, பணி முன் அனுபவம் குறித்த அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். இதோடு விண்ணப்படிவத்தில் பாஸ்போட் சைஸ் புகைப்படங்களையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு வருகின்ற டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Administrator,
SAI, Dr, Syama prasad Mookerjee swimming pool complex,
Mother therasa crescent Road,
New delhi -110001
தேர்வு முறை
மேற்கண்ட முறைகளைப்பின்பற்றி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம்
நேர்காணலில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 23,283 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.