IFGTB Recruitment : வன மரயியல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
IFGTB Recruitment : வன மரயியல் மற்றும் மரபெருக்கு நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB) Recuitmemt:
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சகத்திம் கீழ் கோயம்புத்தூரில் செயபட்டு வருகிறது வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம் (Institute of Forest Genetics and Tree Breeding). இதில் உதவியாளர், பன்முக உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு நேரடி நியமனம் அடிப்படையில் ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். ஆர்வம் உள்ளவர்கள் மறந்துடாதீங்க. இன்றிரவு 11 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
பன்முக உதவியாளர் (Multi-Tasking Staff) -5
உதவியாளர் (Lower Division Clerk) -3
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) - 2
கல்வித் தகுதி:
உதவியாளர் (Multi-Tasking Staff) பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் பணிக்கு 12 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு B.Sc Botany அல்லது B.Sc Agriculture படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பன்முக உதவியாளர் (Multi-Tasking Staff) மற்றும் உதவியாளர் (Lower Division Clerk) ஆகிய பணிகளுக்கு 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 32 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
பன்முக உதவியாளர் (Multi-Tasking Staff) - ரூ. 18,000
உதவியாளர் (Lower Division Clerk) - ரூ. 19,900
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) - ரூ. 29,200
விண்ணப்பக் கட்டணம்:
Multi-Tasking Staff: ரூ. 500 பட்டியலின / பழங்குடியின பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250
Lower Division Clerk: ரூ. 1000 ;பட்டியலின / பழங்குடியின பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 500
Technical Assistant: ரூ. 1,500 : பட்டியலின / பழங்குடியின பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 750
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறிவுத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ifgtb.icfre.org/advertisements.php என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2022 / 11 மணி வரை
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ifgtb.icfre.org/advertisement/Advt_recruitment_MTS,%20LDC%20&%20TA_14%20oct%202022.PDFஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் வாசிக்க..