Postal Jobs : 10-ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றவர்களா? மதுரை மண்டல அஞ்சலகப் பணிக்கு உடனே அப்ளை பண்ணுங்க..
விண்ணப்பித்தாரர்கள் அனைவருக்கும் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் தேர்வாகும் தகுதியானவர்கள் மட்டுமே இப்பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறையின் மதுரை மண்டலத்தைச் சேர்ந்த திண்டுக்கல், காரைக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்தியா முழுவதுமுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் தபால்களையும் கொண்டு சேர்ப்பது முதல் அனைத்துத் தரப்பட்ட மக்களும் தங்களி்ன் பணத்தைச் சேமித்து வைப்பது முதல் பல்வேறு பணிகளை அஞ்சல் துறை சிறப்பாக மேற்கொண்டுவருகிறது. இத்தகைய சிறப்ப வாய்ந்த மத்திய அரசு பணியான இந்த அஞ்சல் துறையின் கீழ் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். இதற்கு டிகிரி படித்திருக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் குறைவான கல்வித்தகுதி பெற்றிருந்தால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மதுரை மண்டல அஞ்சலகப்பணிக்கு கார் ஓட்டுநர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையின், தமிழ்நாடு வட்டம், மதுரை மண்டலத்தைச் சேர்ந்த திண்டுக்கல், காரைக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக்கொள்வோம்.
மதுரை மண்டல அஞ்சலகத்துறையில் கார் ஒட்டுனர் பணிக்கானத் தகுதிகள்:
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
திண்டுக்கல் – 1
காரைக்குடி -1
இராமநாதபுரம் -1
சிவகங்கை- 1
கல்வித் தகுதி :
இந்திய அஞ்சல்துறையின் கீழ் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், உங்களது சுய விபரங்கள் அனைத்தையும் விண்ணப்படிவத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பப்படிவத்தோடு தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து கீழ்ககண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
The Manager,
Mail Motor Service,
Tallakulam,
Madurai – 625 002
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: மே 21, 2022
தேர்வு செய்யப்படும் முறை : மேற்கண்ட முறைகளில் விண்ணப்பித்தாரர்கள் அனைவருக்கும் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் தேர்வாகும் தகுதியானவர்கள் மட்டுமே இப்பணிக்கு நியமனம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம் : மாதந்தோறும் ரூ. 18,000 ஆயிரம் முதல் 62,000 என நிர்ணயம்.
மேலும் இந்த வேலைவாய்ப்புக் குறித்த கூடுதல் விபரங்களை, https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_23032022_TN_Eng.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.