மேலும் அறிய

Indian Bank Recruitment:பொறியியல் பட்டதாரியா? அரசு வங்கியில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

Indian Bank Recruitment: இந்தியன் வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

Indian Bank Recruitment:  நாட்டின் முதன்மையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் உள்ள காலி பணியிடங்களுக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னையை தலமையிடமாக கொண்டு பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுவரும் இந்தியன் வங்கிகளில் பணிபுரிய  காலி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு இது. சென்னை. கொல்கத்தா, மும்பை அல்லது வங்கி நிர்வாகம் முடிவு செய்யும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க அடுத்த 1,ஜனவரி,2024 -ஆம் தேதி கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் பணியின் விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

பணி விவரம்:

  • சிவில் பொறியாளர் (லெவல் 1)
  • சிவில் பொறியாளர் ( லெவல் 2)
  • Data Protection Officer 

பணி இடம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் சென்னை அல்லது கொல்கத்தா, மும்பை ஆகிய மாநிலங்களில் உள்ள மற்ற இந்தியன் வங்கி கிளைகளில் நியமிக்கப்படுவர்.

Data Protection Officer  பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் சென்னையில் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர்.

கல்வித் தகுதி:

Data Protection Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.E. / B.Tech. / M.E./ M.Tec./MCA/ ஆகிய படிப்புகளில் சாஃப்வேர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கூடுதல் கல்வித் தகுதியாக கீழ்கண்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Certified EU GDPR Foundation 

  •  CIPP (Certified Information Privacy Professional)
  •  CIPM (Certified Information Privacy Manager)
  •  CDPSE (Certified Data Privacy Solutions Engineer)
  •  CIPT (Certified Information Privacy Technologist)

சிவில் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க B.E / B.Tech in Civil Engineering துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சிவில் பொறியாலர் லெவல் 1 பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில்குறைந்தபட்சம் 2 ஆண்டுகளும் லெவல் 2 பணியிடத்திற்கு 5 ஆண்டுகளும் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

வயது வரம்பு:

டேட்டா பாதுப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 40 வயது முதல் 60 வயது வரை இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிவில் பொறியாளர் பணி..

ஊதிய விவரம்

சிவில் பொறியாளர் லெவல் - 1 -  1- ரூ.9.00 லட்சம் / annum

சிவில் பொறியாளர் லெவல் - 2 -  1- ரூ 12.00 லட்சம் / annum

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மதிப்பெண் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல், குழு விவாதம் , Psychometric tests, Presentation ஆகியவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

“Application for Engagement of Civil Engineers on Contractual Basis” /  “Application for Data Protection Officer on Contractual Basis”  என்று குறிப்பிட்டு சுயவிவர குறிப்பு மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். 

பட்டியலின/பழங்குடியின பிரிவினருக்கு ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்ப தொகை ஜி.எஸ்.டி-யுடன் செலுத்த வேண்டும்.

கவனிக்க..

விண்ணப்பதாரர்கள் தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரி இரண்டையும் செயலில் இருப்பதை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளப்பட்டுள்ளது. 

நேர்காணல் உள்ளிட்ட தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது. பணி நிரந்தரம், பணி இடம் ஆகியவற்றில் இந்தியன் வங்கி நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

 முகவரி:

General Manager (CDO), Indian Bank

Corporate Office, HRM Department, Recruitment Section

254-260, Avvai Shanmugham Salai,

Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.

30 நாள் ப்ரோ ராடா விடுப்பு கூடுதல் விடுப்பு, ஊதிய விவரம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அறிவிப்பின் - https://www.indianbank.in/wp-content/uploads/2023/12/Detailed-Advertisement_DPO.pdf  -லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

சிவில் பொறியாளர் -https://www.indianbank.in/wp-content/uploads/2023/12/Detailed-Advertisement_Civil-Engineer.pdf

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 01.01.2024

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS vs Duraimurugan:
EPS vs Duraimurugan: "86 வயதில் பொய்யா? திமுகவின் பித்தலாட்டம்” துரைமுருகனை நேரடியாகச் அட்டாக் செய்த ஈபிஎஸ்
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
TNEA Counselling: பொறியியல் கலந்தாய்வு; எந்த படிப்புக்கு டிமாண்ட்? கல்லூரிகள் நிலை என்ன? - அச்சுறுத்தும் Choice Filling!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
State Education Policy: இனி பள்ளிகளில் புது கல்விமுறை! திறந்தநிலைத் தேர்வு- மாநில கல்விக்கொள்கை பரிந்துரை!
Ramadoss Vs Anbumani: முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
முடிவுக்கு வருமா மோதல்.?; ராமதாஸ், அன்புமணியை தனியாக பேச அழைத்த நீதிபதி - விவரம் என்ன.?
CHN AC Electric Bus: சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்.! - 11-ம் தேதில இருந்து ஏசி மின்சார பேருந்துல பயணம் செய்யலாம்
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
Trump Modi: கடுப்பேற்றிய மோடி? பழிவாங்கும் ட்ரம்ப் - பாகிஸ்தான் செய்ததை செய்யாத இந்தியா? நட்பு காலி..
State Education Policy: 3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
3 ஆண்டாக தூங்கிவிட்டு, இப்போது எதற்காக கல்விக் கொள்கை? விளம்பரமா? அண்ணாமலை கேள்வி
Rahul Warns EC: “காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
“காலம் மாறும்.. எங்க கிட்ட இருந்து தப்ப முடியாது“ - ராகுல் காந்தியின் எச்சரிக்கை யாருக்கு தெரியுமா.?
Embed widget