மேலும் அறிய

IAF Recruitment: இந்திய விமானப்படையில் பணியாற்ற வாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?முழு விவரம்!

IAF Recruitment 2023: இந்திய விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

இந்திய விமானப்படையில் பணிபுரிவதற்கு, சில பணிகளுக்கு இந்திய விமானப்படை நுழைவுத் தேர்வு  (AFCAT) நடத்துகிறது. இந்த விமானப்படை பணிகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிபக்கலாம். 

IAF Recruitment: இந்திய விமானப்படையில் பணியாற்ற வாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?முழு விவரம்!

பணி விவரம்

  • பறக்கும் பிரிவு (Flying Branch) - 38 (ஆண்கள் – 28, பெண்கள் - 10)
  • தரைப் பணி, தொழில்நுட்பம் சார்ந்து Ground Duty (Technical) Branch - 165 (ஆண்கள் – 149, பெண்கள் - 16)
  • தரைப் பணி தொழில்நுட்பம் சாராதது Ground Duty (Non-Technical) Branches - 114 (ஆண்கள் – 98, பெண்கள் - 16)

மொத்த எண்ணிக்கை -  317

கல்வித் தகுதி:

பறக்கும் பிரிவு (Flying Branch)

12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  பட்டப்படிப்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும்

 தரைப் பணி, Ground Duty

12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அடுத்ததாக பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை-

எழுத்து தேர்வு

நேர்முகத் தேர்வு

உடற்தகுதி தேர்வு

இறுதியில் அனைத்து தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

வயது வரம்பு:

பறக்கும் பிரிவு (Flying Branch) -  20 வயது முதல் 24 வயதுவரை

 தரைப் பணி, Ground Duty       -  20 வயது முதல்  26 வயது வரை

விண்ணப்ப கட்டணம்- ரூ. 550 (ஜி.எஸ்.டி. வரி உடன்.)

விண்ணப்பிக்கும் முறைகள்:

விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் என்ற https://afcat.cdac.in/AFCAT/ - இணையதளத்திற்கு க்ளிக் செய்யவும்.

அதில் விண்ணப்ப அறிக்கையை https://afcat.cdac.in/AFCAT/assets/images/news/AFCAT_01_2024/English_Notification_AFCAT_01-2024.pdf- பதிவிறக்கம் செய்து தெளிவாக படித்து வேலை குறித்தான அனைத்து  தகவல்களையும் தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.12.2023

எஸ்.எஸ்.சி. வேலைவாய்ப்பு

SSC என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ] Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles ஆகிய பணியிடங்களுக்கான 26,146 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் வாசிக்க..

27-ம் தேதி வேலைவாய்ப்பிற்கான நேர்காணல்

அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக (Postal Life Insurance / Rural Postal Life Insurance products) புதிய நேரடி முகவர்களுக்கான (Direct Agents)வேலைவாய்ப்பு அறிவிப்பினை சென்னை மத்திய கோட்டம் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.

பணி விவரம்:

 காப்பீட்டு முகவர்கள்

கல்வி தகுதி: 

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பிரிவுகள்:

சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி பயன்படுத்த தெரிந்தவர்கள் சொந்த பகுதியில் வசிப்பவர்கள் அதை பற்றி நன்கு அறிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.  

எப்படி விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ளவர்கள் செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம், சென்னை 600016 (ஆலந்தூர் மெட்ரோ அருகில்) உள்ள அலுவலகத்தில்  27.12.2023 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேர்காணலுக்கு வருபவர்கள் மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு),  வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்வி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இரண்டு உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (National Savings Certificate (NSC)/KisanVikasPatra (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது.  

இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வாடிக்கையாளர்களின் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல் தி பெஸ்ட்..

நேர்காணல் நடைபெறும் இடம்:

செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம்,

சென்னை 600016 (ஆலந்தூர் மெட்ரோ அருகில்)

நேர்காணல் நடைபெறும் நாள் - 27.12.2023

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Trump Vs Hamas: பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
இந்தி பெல்ட் மாநிலங்களில் ஒற்றை மொழி மட்டுமே பேசும் 90% மக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தி பெல்ட் மாநிலங்களில் ஒற்றை மொழி மட்டுமே பேசும் 90% மக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Muthukumaran Vs Soundariya: Trump Praises Pakistan: பாகிஸ்தானுக்கு திடீர் பாராட்டு! இந்தியாவுக்கு செக்! ட்விஸ்ட் வைத்த ட்ரம்ப்Chandrababu Naidu vs MK Stalin : ’’இந்தி அவசியம்!’’சந்திரபாபு நாயுடு vs ஸ்டாலின் மும்மொழிக்கொள்கைStudents with PMK Flag : ஆண்டு விழாவா?கட்சிக்கூட்டமா?பாமக துண்டுடன் மாணவர்கள் சாதி பாடலுக்கு நடனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Coimbatore: இந்துக்களின் தாகம் தீர்த்த இஸ்லாமியர்கள்! இதுதான்டா தமிழ்நாடு! கோவையில் நெகிழ்ச்சி
Trump Vs Hamas: பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
பிணைக் கைதிகள உடனே விடலைன்னா நீ செத்த.. ட்ரம்ப்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸின் பதில் என்ன.?
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. அசத்த வரும் பதஞ்சலி தொழிற்சாலை!
இந்தி பெல்ட் மாநிலங்களில் ஒற்றை மொழி மட்டுமே பேசும் 90% மக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தி பெல்ட் மாநிலங்களில் ஒற்றை மொழி மட்டுமே பேசும் 90% மக்கள்; வெளியான அதிர்ச்சித் தகவல்!
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamilisai Soundararajan : ”முன்னாள் ஆளுநருக்கே இந்த நிலையா?” போலீசாரிடம் எகிறிய தமிழிசை..!
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
Tamil 3rd Language: ”தமிழ்” மொழிக்கு சிறப்பு அந்தஸ்து..! நாடு முழுவதும் பறந்த கடிதம், மூன்றாவது பொதுமொழியாகும் செம்மொழி?
NEET UG Registration: அலர்ட் மாணவர்களே… நீட் தேர்வு விண்ணப்பிச்சாச்சா? நாளையே கடைசி- இதோ Guide!
NEET UG Registration: அலர்ட் மாணவர்களே… நீட் தேர்வு விண்ணப்பிச்சாச்சா? நாளையே கடைசி- இதோ Guide!
Embed widget