IIT Madras Recruitment 2023: சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
IIT Madras Recruitment 2023: சென்னை ஐ.ஐ.டி.-யில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தினை இக்கட்டுரையில் காணலாம்.
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ’Centre for Excellence for Road Safety (CoERS)’ துறையில் ’GIS Analytics’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
GIS Analytics
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
இந்தப் பணிக்கு ‘Urban Planning / Geo Informatics / Remote sensing / Computer Science’ ஆகிய துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
‘Urban Planning / Geo Informatics / Remote sensing / Computer Science’ ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
‘Urban Planning / Geo Informatics / Remote sensing / Computer Science’ ஆகிய துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் …
ஊதிய விவரம்:
இளங்கலை பட்டம் – ரூ.25,000
முதுகலை பட்டம் – ரூ.35,000
முனைவர் பட்டம் – ரூ.60,000
மாத ஊதியத்துடன் மற்ற சலுகைகளும் வழங்கப்படும் என்றும், தகுதியிருப்பின் உயர்க்கல்வி பயில வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி காலம்:
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு கால பணி ஒப்பந்தம் வழங்கப்படும். பணி திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த அறிவிப்பு குறித்த விவரங்களை https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பின் மூலம் தெரிந்து கொண்டு தேவைவான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதிகளின் அடிப்படையில் தேவ்ரு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2023
https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20GIS%20Analytics%20-%20Advt68..pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.
ஆல் தி பெஸ்ட்!
மேலும் வாசிக்க..
எஸ்பிஐ கிரெடிட் கார்டில் இனி இதற்கெல்லாம் கேஷ்பேக் கிடையாது… நடைமுறைக்கு வந்த புதிய விதிகள்!