மேலும் அறிய

NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!

NEET UG 2026 Dress Code: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்குச் செல்லும்போது என்னென்ன விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்?

நீட் இளங்கலை (NEET UG) தேர்வு நாளை மறுநாள் (மே 3) வெளியாகும் நிலையில், தேர்வுக்கான ஆடை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) மே 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வை நடத்தும் . தேசியத் தேர்வுகள் முகமை (NTA), தேர்வுக்கான  ஆடை கட்டுப்பாட்டு நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்குச் செல்லும்போது இந்த விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகள் என்னென்ன?

  • ஆடைகள்: தேர்வர்கள் அரைக்கை கொண்ட, வெளிர் நிற ஆடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். முழுக்கை கொண்ட சட்டைகள் அல்லது ஆடைகளை அணிய அனுமதி இல்லை. ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் அல்லது எம்பிராய்டரி டிசைன்கள் இருக்கக் கூடாது.
  • காலணிகள்: குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இருபாலரும் எக்காரணத்தைக் கொண்டும் ஷூக்கள் அணியக் கூடாது.

NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!

ஆபரணங்களுக்கு தடை

தேர்வர்கள் காதணிகள், மோதிரங்கள், பதக்கங்கள், கழுத்தணிகள், வளையல்கள், கொலுசுகள் போன்ற எவ்விதமான நகைகளையோ ஆபரணங்களையோ அணிந்து வரக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத மற்றும் கலாச்சார ஆடைகள்

தங்கள் மத அல்லது கலாச்சார ரீதியான குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வரும் தேர்வர்கள், முறையான சோதனைக்கு (Frisking) உட்படுத்தப்படுவார்கள். இதற்காக சம்பந்தப்பட்ட தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு முன்கூட்டியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

  • மொபைல் போன்கள், ப்ளூடூத் கருவிகள், இயர்போன்கள், மைக்ரோஃபோன்கள், பேஜர்கள், கால்குலேட்டர்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு அறைக்குள் கொண்டுசெல்ல அனுமதி இல்லை.
  • அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட காகிதங்கள், ஜியோமெட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், பேனா, ஸ்கேல், ரைட்டிங் பேட், பென் டிரைவ் மற்றும் எரேசர் உள்ளிட்ட எந்த ஸ்டேஷனரி பொருட்களையும் உள்ளே கொண்டு செல்லக் கூடாது.
  • பர்சுகள், கூலிங் கிளாஸ்கள், ஹேண்ட் பேக்குகள், பெல்ட்கள் மற்றும் தொப்பிகள் ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளே அனுமதிக்கப்படாது.

எவற்றுக்கெல்லாம் அனுமதி?

தேர்வர்கள் தங்களது அட்மிட் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அசல் அடையாள அட்டை ஆகியவற்றை மட்டுமே தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என என்டிஏ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
அரசு கலைக்கல்லூரி சேர்க்கை அதலபாதாளம்: 43% இடங்கள் காலி! கல்வித்தரம் கேள்விக்குறியா?
அரசு கலைக்கல்லூரி சேர்க்கை அதலபாதாளம்: 43% இடங்கள் காலி! கல்வித்தரம் கேள்விக்குறியா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
Embed widget