மேலும் அறிய

Sasikumar: "சசிகுமார் எனும் ஃபீனிக்ஸ் பறவை.." புகழாரம் சூடிய நந்தன் பட இயக்குனர்!

நடிகரும், இயக்குனருமான சசிகுமார் ஒரு ஃபீனிக்ஸ் பறவை என்று இயக்குனர் இரா.சரவணன் புகழாரம் சூடியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர் சசிகுமார். இவர் தற்போது நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் கடந்தாண்டு நடித்து வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

இந்த படத்தின் வெற்றி குறித்து சசிகுமாரின் நண்பரும், இயக்குனருமான இரா.சரவணன் பதிவிட்டுள்ளதாவது,

டூரிஸ்ட் ஃபேமிலி:

“சசிகுமார் அவ்வளவுதான்” எனப் பலரும் முடிவு கட்டிவிட்ட நேரத்தில், பீனிக்ஸ் பறவையைப்போல் அவரை எழ வைத்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. படம் ரிலீஸாகி இன்றோடு ஒரு வருடம். படப்பிடிப்பு போய்க்கொண்டிருந்த ஒரு நாளில் சசி சார் போன் பண்ணினார்.

“நல்லா ஷூட் பண்றாங்க. படம் அருமையா வந்துட்டு இருக்கு. ஆனா, பட்ஜெட் மட்டும் ஜாஸ்தியாகும் போல… யுவராஜ்கிட்ட பேசி கொஞ்சம் சிக்கனமா பண்ணச் சொல்லுங்க. நம்மளை நம்பி முதல் போடுறாங்க. நாளைக்கு அவங்க சங்கடப்பட்டு நின்னுடக் கூடாது” என்றார் சசிகுமார் சார். 

ரூபாய் 100 கோடி வசூல்:

தம்பி யுவராஜுக்கு போன் பண்ணி பல விஷயங்களைப் பேசிவிட்டு இறுதியாக, “படத்தைக் கொஞ்சம் சிக்கனமா பண்ணுங்க தம்பி…” என்றேன். எதிர்முனையில் பதில் இல்லை. “இப்பெல்லாம் சசி சாருக்கு பெரிய பிசினஸ் இல்லப்பா.. அகலக்கால் வைக்காதீங்க” என்றேன் வெளிப்படையாய். 

“சார், தயவுபண்ணி சசி சாரை குறைச்சு மதிப்பிடாதீங்க. அவர் 100 கோடி பிசினஸ்க்கு வொர்த்தான ஹீரோ. இந்தப் படம் நிச்சயம் ஒரு மேஜிக் பண்ணும். நீங்க பட்ஜெட் பற்றியெல்லாம் யோசிக்காதீங்க சார்” என்றார் யுவராஜ். அவர் சொன்னது போலவே 100 கோடிக்கான வசூல் பட்டியலில் இணைந்து வாகை சூடியது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம்! 

பந்தய குதிரை:

“சசி சார் அவ்வளவுதான்” எனச் சொன்னவர்களே அவருடைய தேதிக்காக இன்றைக்கு க்யூவில் நிற்கிறார்கள். பந்தயக் குதிரையாக மறுபடியும் பாய்ச்சல் காட்டத் தொடங்கிவிட்டார் சசிகுமார். படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அத்தனை பேரும் கோடி நன்றிக்குரியவர்கள். “இங்கே யாரும் அகதி இல்லை” என ஓங்கி உரைத்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நிச்சயம் காலம் கடந்தும் பேர் சொல்லும் காவியமாக நிலைத்திருக்கும்!

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகுமார் முதன்முதலில் இயக்கி நடித்த திரைப்படம் சுப்பிரமணியபுரம். இந்த படம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்ததால் நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, வெற்றிவேல் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை அளித்தார்.

அதன்பின்பு, சில படங்கள் தோல்வி அடைந்த நிலையில், அயோத்தி, கருடன், நந்தன் என தரமான படங்களில் நடித்தார். இந்த சூழலில், கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ரிலீஸ்.. இனிமேல் தான் இருக்கு கதையே.. கௌதம் ட்வீட்!

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget