மேலும் அறிய

மயிலாடுதுறை: 12-வது முடித்தவர்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணி வாய்ப்பு; மே 4-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அறிவுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை நட்பு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கோடும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் பணியாற்ற ஆர்வமுள்ள சட்ட தன்னார்வ தொண்டர்கள் (Para Legal Volunteers) வரவேற்கப்படுவதாக மாவட்ட அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முனைவர் எல்.எஸ். சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சாராம்சம் பின்வருமாறு:

நோக்கமும் பணியின் தன்மையும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுக்களின் செயல்பாடுகளை வலுப்படுத்த இந்தத் தேர்வு நடைபெறுகிறது. குறிப்பாக, குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், குழந்தைகளுக்கு எதிரான கடத்தல் குற்றங்களைத் தடுத்தல் மற்றும் அடிமைத்தனத்திலிருந்து குழந்தைகளை மீட்டெடுத்தல் போன்ற மிக முக்கிய சமூகப் பணிகளுக்காக இந்த தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுவர்.

மீட்கப்படும் குழந்தைகளுக்கு முறையான மறுவாழ்வு அளிப்பதுடன், அவர்களுக்குத் தடையற்ற கல்வி கிடைப்பதை உறுதி செய்து, ஒரு பாதுகாப்பான மற்றும் குழந்தை நட்பு சமுதாயத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சட்ட ரீதியான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் பாலமாகச் செயல்படுவார்கள்.

முக்கிய நிபந்தனைகள்

இந்தத் தன்னார்வலர் பணியானது முற்றிலும் ஒரு சேவை நோக்கம் கொண்டது என்பதைத் தலைமை நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இது ஒரு நிரந்தர அரசுப் பணி அல்ல. இது முற்றிலும் தற்காலிகமானது மற்றும் இதற்கு அடிப்படைச் சம்பளம் அல்லது மாதாந்திர ஊதியம் எதுவும் கிடையாது. தன்னார்வலர்கள் மேற்கொள்ளும் சேவைக்குத் தகுந்தவாறு அரசு நிர்ணயித்துள்ள தினசரி மதிப்பூதியம் (Honorarium) மட்டுமே வழங்கப்படும். எனவே, சேவை மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் வயதுத் தகுதி

விண்ணப்பதாரர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பு (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். எனினும், பட்டதாரிகள் மற்றும் சமூகப் பணி (Social Work), உளவியல் (Psychology) அல்லது அது சார்ந்த துறைகளில் கல்வித் தகுதி பெற்றவர்களுக்குத் தேர்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும்.

சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு உடையவர்கள் இந்தத் தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர்.

பணிக்காலம் மற்றும் தேர்வு முறை

தேர்ந்தெடுக்கப்படும் சட்ட தன்னார்வலர்கள் முதற்கட்டமாக ஓராண்டு காலத்திற்குப் பட்டியலிடப்படுவர். அந்த ஓராண்டு காலத்தில் அவர்களின் செயல்பாடுகள், அர்ப்பணிப்பு மற்றும் களப்பணிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரின் பரிந்துரையின் பேரில் அவர்களின் பணிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நடத்தப்படும். நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் மற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பெறாதவர்கள் குறித்த அனைத்துத் தகவல்களும் மாவட்ட நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். இதற்காகத் தனியாக அஞ்சல் வழித் தகவல்கள் அனுப்பப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவங்களை மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற இணையதளமான https://mayiladuthurai.dcourts.gov.in/என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து, வருகின்ற 04.05.2026 ஆம் தேதிக்குள் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது பதிவுத் தபால் (Registered Post) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர் முனைவர் எல்.எஸ். சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக மாற்றத்திற்காகப் பங்காற்ற விரும்பும் தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget