மேலும் அறிய

Rajinikanth's Jailer: ரஜினி ரசிகர்களே தயாராகுங்க... ஜெயிலர் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினி - நெல்சன் காம்போ

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக நடிகர் ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைத்துள்ள திரைப்படம் ஜெயிலர்.

2021ஆம் ஆண்டு நடித்த அண்ணாத்த படத்தை அடுத்து கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக இந்தப் படம் வெளியாகிறது. சன் பிச்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிலையில் அனிருத் இந்த்ப் படத்துக்கு இசையமைக்கிறார்.

நட்சத்திரப் பட்டாளம்

தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், ரஜினி அல்லாது மலையாள உச்ச நட்சத்திரம் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார்,  தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் பிரபலம் ஷாக்கி ஷெராஃப் என பல மொழி ஸ்டார்களும் நடித்துள்ளனர்.

யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக இந்தப் படம் தயாராகியுள்ளது.

இறுதிக்கட்ட ஷூட்டிங்

இந்தப் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல்கள் கடந்த சில நாள்களாக இணையத்தில் வெளியாகி வந்தன. தொடர்ந்து இன்று மாலை பட வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இன்று அதன்படி படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் படத்தின் முக்கிய நடிகர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். 

ஒத்திப்போன ரிலீஸ் தேதி

முன்னதாக இந்த ஆண்டு கோடை ஸ்பெஷலாக ஜெயிலர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் காரணமாக ஜெயிலர் ரிலீஸ் ஒத்திப்போனது. 

இதனையடுத்து தீபாவளி ரிலீசாக படம் வெளியாகலாம் அல்லது சுதந்திர தின விடுமுறை நாள்களைக் குறிவைத்து படம் வெளியாகலாம் என்றும் முன்னதாகத் தகவல்கள் வெளியாகின. அதன்படி சுதந்திர தின விடுமுறையைக் குறிவைத்து தற்போது ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது. 

முன்னதாக ஜெயிலர் பட வெளியீட்டை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் முன்கூட்டியே வெளியாகலாம் என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Leo Shooting Spot : வேகமெடுக்கும் லியோ ஷூட்டிங்... விஜய் - த்ரிஷா டூயட்டுக்கு பிரம்மாண்ட செட்... விரைவில் சென்னை வரும் சஞ்சய் தத்!

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகைக்கு சம்மன்! - நவ.2 இல் ஆஜராக உத்தரவு
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
நவம்பர் முதல் ஜனவரி வரை வரிசைகட்டும் தமிழ்ப் படங்கள்.. ரிலீஸுக்குத் தயாராகும் 20 படங்கள்!
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் தமிழில் வெளியாகி இருக்கும்  'ஜிக்ரிஸ்'
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*
*தெய்வ அருள்மனத்தோடு 'வேட்ட சாமி' படத்தின் 'சாமி அழைப்பு' லிரிக்கல் வீடியோ வெளியானது!*

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்ச் அலர்ட்! எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது... மக்களே உஷார்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
மகளிர் உதவித்தொகை ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
Saturn Transit: சனியின் நட்சத்திர பெயர்ச்சி! இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்கள் ராசி இதில் இருக்கா?
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
IND vs NZ: 7 ரன்னில் சதத்தை தவறவிட்ட சீஃபர்ட்! கிளென் பிலிப்ஸ் அதிரடியால் நியூசிலாந்து அபார வெற்றி!
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
School Student: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,25,000 வரை உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
Murasu Cyclone: உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
அடிக்கடி மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு நாள்! - முரண்பாடு ஏற்பட்டது ஏன்? வரலாறு சொல்லும் செய்தி என்ன?
அடிக்கடி மாற்றம் செய்யப்பட்ட தமிழ்நாடு நாள்! - முரண்பாடு ஏற்பட்டது ஏன்? வரலாறு சொல்லும் செய்தி என்ன?
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
ஜிபிஎஸ் கருவி பொறுத்தாத லாரிகளுக்கு NO அனுமதி: இன்று முதல் அமலாகும் புதியவிதி என்ன?
Embed widget