IDBI Recruitment 2023: வங்கி வேலை வேண்டுமா? தனியார் வங்கியில் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
IDBI Recruitment 2023: பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரத்தை இங்கே காணலாம்.
பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 136 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Specialist Cadre Officers பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டதேவையான தகுதிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம்.
பணி விவரம்
- Audit (Information System)
- Corporate Strategy & Planning Department (CSPD)
- Risk Management
- Fraud Risk Management
- Treasury
- Infrastructure Management Department (Premises)
- Security
- Legal
- Finance & Accounts Department
- Corporate Credit
மொத்த பணியிடங்கள்:
136 (பணியிட எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.)
கல்வித்தகுதி:
- மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.
- ஐ.டி.ஆடிட் பணிக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி. ஐ.டி., பி,.டெக்., அல்லது பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்.சி., ஐ.டி. படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- Certified in Risk and Information Systems Control (CRISC)/ Certified Information Systems Security Professional -CISSP ஆகிய சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
- இதற்கு விண்ணப்பிக்க குறைந்தது BFSI-யில் ஏழாண்டுகள் பணி அனுபவம் இருப்பவராக இருக்க வேண்டும்.
- Deputy General Manager (Grade D) பணிக்கு விண்ணப்பிக்க பொருளாதாரம், பிசினஸ் பொருளாதாரம் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். வங்கி சார்ந்த பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- மேலாளர் (Grade B) பணிக்கு பொருளாதார துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இதற்கு விண்ணப்பிக்க குறைந்தது 4 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க 25 வயது நிரம்பியவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கு தனித்தனியே வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிகளுக்கு கல்வித் தகுதிகள் மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்க பட்டியலின / பழங்குடியின பிரிவினர் ரூ.200-யும், பொதுப்பிரிவினர் ரூ.1000-யும் ஆன்லைனில் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/- என்ற லிங்கி கிள்க் செய்யவும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Spl-23-24-May222023.pdf -என்ற இணைப்பில் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- https://www.idbibank.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின்னர், “CAREERS/CURRENT OPENINGS” என்பதை க்ளிக் செய்யவும்.
- Recruitment of Specialist Cadre Officers - 2023-24
பக்கத்திற்கு செல்லவும். - “APPLY ONLINE” என்பதை க்ளிக் செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு.. https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Spl-23-24-May222023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.06.2023
இந்த வேலைவாய்ப்பிற்கு ஜுன்,1 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Spl-23-24-May222023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.