IB Recruitment 2023 : 1,675 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!
IB Recruitment 2023: மத்திய உளவுத்துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை வரை (17.02.2023 ) கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய உளவுத்துறையின் கீழ் செயல்படும் பிரிவிற்கு பாதுகாப்பு உதவியாளர் மற்றும் பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் (Security Assistant/Executive (SA/Exe) & Multi-Tasking Staff/General (MTS/Gen) ) உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 1,675 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை வரை (17.02.2023 ) கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம் :
பாதுகாப்பு உதவியாளர்கள்
பன்னோக்கு பணியாளர்கள்
சென்னையில் மொத்த பணியிடங்கள் - 113
மொத்த பணியிடங்கள் (நாடு முழுவதும்) - 1,675
பணியிடங்கள்:
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பெங்களூரு, அகமதாபாத், அமிர்தசரஸ்,புவனேஷ்வர், டெல்லி, கெளகாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்பூர், கல்கத்தா, ஜம்மு, பாட்னா, நாக்பூர், ராய்பூர், சென்னை, லக்னோ, ராஞ்சி, சிம்லா உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் நியமிக்கப்படுவர்.
கல்வித் தகுதி
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு அல்லத்து அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிர்க்க வேண்டும்.
வயது வரம்பு
பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 10.02.2023 அன்றின்படி, 27-வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பன்னோக்கு பணியாளர் பதவிக்கு 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
Level-3 - ரூ. 21,700- 69, 100
Level-1 - ரூ. 18,000 - 56,900
விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mha.gov.in-யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். https://www.ncs.gov.in/- என்ற லிங்கையும் பயன்படுத்தலாம்.
தேர்வு முறை:
இதற்கு இரண்டு கட்டங்களாக ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். இதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு பாடத்திட்டம்
கவனிக்க
இதற்கு விண்ணப்பிக்க அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியில் பேச தெரிந்திருக்க வேண்டும். கொஞ்சமேனும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு.. https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1118639501130586603209.pdf
- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.02.2023
மேலும் வாசிக்க.