மேலும் அறிய

645 காலிப் பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது? - முழு விவரம் உள்ளே

தோ்வா்களின் நலன் கருதி குரூப்-2 ஏ முதன்மைத் தோ்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதன்மைத்தோ்வானது குரூப்-2 பணிகளுக்கும், குரூப்-2ஏ பணிகளுக்கும் தனித்தனியே நடத்தப்படும்.

இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், வனவா், மேற்பார்வையாளர், இளநிலைக் காப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளா், உதவியாளா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கான தோ்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “சாா்-பதிவாளா், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், வனவா், மேற்பார்வையாளர், இளநிலைக் காப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளா், செயல் அலுவலர்-II, உதவியாளா் உள்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தோ்வுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானவை. பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் காலிப் பணியிடங்கள் பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக மேலும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தகுதி: தேர்வர்கள் பத்தாம் வகுப்பு, மேல்நிலை, பட்டயம், பட்டம், முதுகலைப்பட்டம் என்ற வரிசையில் பெற்றிருக்க வேண்டும். பதவி வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள தகுதியை அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி வயதுவரம்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வனவர், நன்னடத்தை அலுவலர் மற்றும் சார் பதிவாளர் நிலை-II ஆகிய பதவிகளைத் தவிர, பிற அனைத்து பதவிகளுக்கும் உச்ச வயதுவரம்பு இல்லை. வயதுவரம்பு குறிந்த அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

முதல்நிலைத் தோ்வை பொருத்தவரையில் குரூப்-2, குரூப்-2ஏ இரு தோ்வுகளுக்கும் பொதுவான தோ்வுதான். பொது அறிவு மற்றும் கணிதம் தொடா்பான 100 கேள்விகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பாடத்தில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள். இதில் வெற்றிபெறுவோா் அடுத்த கட்ட தோ்வான முதன்மைத்தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா்.

முதன்மைத் தோ்வு முறையில் மாற்றம்

தோ்வா்களின் நலன் கருதி குரூப்-2 ஏ முதன்மைத் தோ்வு முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதன்மைத்தோ்வானது குரூப்-2 பணிகளுக்கும், குரூப்-2ஏ பணிகளுக்கும் தனித்தனியே நடத்தப்படும். குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தோ்வில், பொது அறிவு பகுதியில் 300 மதிப்பெண்களுக்கு விரிவாக விடையளிக்க வேண்டும். குரூப்-2ஏ பணிகளுக்கு பொது அறிவு பகுதியில் 150 கேள்விகள், கணிதம் பகுதியில் 50 கேள்விகள் என அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 300.

கணினி வழியில் தோ்வு

இது கணினி வழியில் நடத்தப்படும். முன்பு பொது அறிவு பகுதியில் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடா்பான 60 வினாக்கள் இடம்பெற்றிருந்தது. தற்போது புதிய தோ்வுமுறையில் மொழிப் பாடம் தொடா்பான அந்த பகுதி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

மேலும், விரிவாக பதில் எழுதக்கூடிய கட்டாய தமிழ் மொழித் தகுதித்தாள் தோ்வு குரூப்-2, குரூப் 2-ஏ இரு முதன்மைத் தோ்விலும் பொது தோ்வாக இடம்பெறும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். இந்த தோ்வில் எடுக்கும் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. கட்டணத்தை வங்கி பற்று, கடன் அட்டை, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் மூலமாக செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.8.2025

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2025 காலை 9.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது வெளியிடப்படும்.

தலைப்பு செய்திகள்

“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”
“10-ம் வகுப்பு போதும்... அரசு வேலை ரெடி! TNPSC குரூப் 4-ல் 6,574 காலியிடங்கள் – ஜனவரி 10-ல் தேர்வு!”
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
TNPSC Group 4: “கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவி!” - குரூப் 4 பணியிட அறிவிப்பை விளாசிய டிடிவி தினகரன்
TNPSC Group 4: “கடல் அளவு தேவைக்கு கடுகளவு உதவி!” - குரூப் 4 பணியிட அறிவிப்பை விளாசிய டிடிவி தினகரன்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Rain Alert: 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று! எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை! சென்னை நிலவரம் என்ன?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
Embed widget