மேலும் அறிய

Job: விழுப்புரத்தில் அரசு வேலை; தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணிகளுக்கு விண்ணபிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலுள்ள எழுத்தர் /உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவிப்பு

எழுத்தர் / உதவியாளர் காலிப்பணியிடங்கள் 

விழுப்புரம் மாவட்டம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தால் நடத்தப்படும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர்ந்து கட்டணம் செலுத்தியதற்கான இரசீதினை கொண்டு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக்கூட்டுறவு கடன்சங்கங்கள், கூட்டுறவுநகர வங்கிகள் மற்றும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் காலியாக உள்ள எழுத்தர் / உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனிஅறிவித்துள்ளார்.

கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகரவங்கிகள் மற்றும் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் காலியாக உள்ள எழுத்தர் /உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 10.11.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் https://drbvpm.in/என்ற இணையதளம் வழியாக (through online only) மட்டுமே 01.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்துத்தேர்வு 24.12.2023  அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது.

கல்வித்தகுதி

இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree 10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். வைகுந்த்மேத்தா தேசியகூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவியல் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24 ஆம் ஆண்டு நேரடி பயிற்சி /அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சிக்கு (Diploma in Cooperative Management) சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரியசான்று /கட்டணம் செலுத்தியதற்கான இரசீதினை விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இது தொடர்பான விரிவான விவரங்கள் விழுப்புரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதளத்தில் ( https://drbvpm.in/ ) வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

மேலும் விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்கு 23-வது அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சிக்கான (Diploma in Cooperative Management) சேர்க்கை 10.11.2023 முதல் 30.11.2023 வரை நடைபெறுகிறது. இச்சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.tncuicm.com என்ற இணையதளம் வழி பெறப்படுகிறது. இணையதளம் வழி 30.11.2023 பிற்பகல் 5.30 மணி வரை விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே பட்டப்படிப்பு முடித்துள்ளவர்கள் இந்தவாய்ப்பினை பயன்படுத்தி விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையத்தால் நடத்தப்படும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேர்ந்து கட்டணம் செலுத்தியதற்கான இரசீதினை கொண்டு விழுப்புரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
Embed widget