Job Fair: 10,000+ பணியிடங்கள்; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Dindigul Mega Job Fair: திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (07.12.2024 சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3.00 மணி வரை எம்.வி.எம், அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, திண்டுக்கல் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களைக் கொண்ட, 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம், திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடங்குகிறது.
எங்கு, எப்போது?
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (07.12.2024 சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3.00 மணி வரை எம்.வி.எம், அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, திண்டுக்கல் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கல்வித் தகுதி என்ன?
8ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் படித்தவர்கள், இதற்குத் தகுதியானவர்கள் ஆவர்.
கலந்து கொள்வது எப்படி?
வேலை தேடும் இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புடன் முகாம் நாளன்று கல்லூரிக்கு நேரில் வருகை புரிந்து பயன் பெறலாம்.
வேலை அளிக்கும் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஆட்களை தேர்வு செய்ய தங்களது மனிதவள தேவை விவரங்களை இத்தளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in ) உள்ள DINDIGUL MEGA JOB FAIR POST –ல் பதிந்து கொள்ளவும். மேலும் கீழ்க்கண்ட https://forms.gle/Kjtqubxtex8i13976 கூகுள் படிவத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 0451-2904065, 9499055924.
வேலைவாய்ப்பு முகாம் சிறப்பு அம்சங்கள்
- 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்
- 10,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்,
- வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை விண்ணப்பம் தகுதிக்கு உட்பட்டு வழங்கப்படும்.
- இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகள் உண்டு.
- போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவுகளும் உண்டு.
தொடர்புக்கு
உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திண்டுக்கல்.
தொலைபேசி எண்: 0451- 2904065
பணி நியமன ஆணைகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர,சக்கரபாணி ஆகியோர் வழங்க உள்ளனர்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/292411180021
தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்து கொள்ள https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.