ஒன்றல்ல... இரண்டல்ல... 4135 வங்கிப் பணிகள்... முழு விபரம் இதோ!
வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என 3 நிலைகளில் நடைபெறும் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் 4135 உதவி மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என வங்கிப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
வங்கிகளில் உள்ள அனைத்துப்பிரிவுகளுக்கும் பணியாளர்களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பம், தேர்வு தேதி போன்றவற்றை வெளியிடுவதில் வங்கிப்பணியாளர் தேர்வு வாரியத்திற்கு முக்கியப்பங்கு உள்ளது. மேலும் அவ்வப்போது வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் நிலையில், தற்போது வங்கிகளில் 4135 உதவி மேனேஜர் பணியிடங்களுக்கான வேலைவாய்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இதற்கான கல்வித்தகுதி, தேர்வு முறைகள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
தற்போது கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ப்ரோபேசனரி ஆபிஸர் அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை தற்போது பணியாளர் தேர்வு வாரியம் மேற்கொண்டுவருகிறது..
பொதுத்துறை வங்கிகளில் உதவி அசிஸ்டென்ட் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 4135
கல்வித்தகுதி : அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உளள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://ibps.in/ என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் நவம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவேண்டும். இதற்கு விண்ணப்பக்கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.850ம், எஸ்.சி மற்றும் எஸ்.சி பிரிவினருக்கு ரூ.175 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முதல்நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என 3 நிலைகளில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழியாக தேர்வுகள் நடத்தப்படும் என வங்கிப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முதல்நிலை மற்றும் முதன்மைத்தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சிப்பெறுபவர்களுக்கு மட்டுமே அடுத்த ஆண்டு அதாவது பிப்ரவரி 2022 ல் நேர்முகத்தேர்வு நடைபெறும் எனவும், அதன்பிறகு அவர்கள் பொதுத்துறை வங்கிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை https://www.ibps.in/wp-content/uploads/PO_XI_DA.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.