TNHRNCE Recruitment 2023: பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்? ரூ.1.13 லட்சம் மாத ஊதியம் - முழு விவரம்!
TNHRNCE Recruitment 2023: கோவை மாவட்டத்தில் உள்ள மாசாணி அம்மன் கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
கோயம்புத்தூர் ஆனைமலை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உள்ள காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 16.08.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
பணி விவரம்:
- இளநிலைப் பொறியாளர் லெவல் 31
- இளநிலைப் பொறியாளர் லெவல் 22
- சீட்டு விற்பனையாளர் லெவல் 22
- பிளம்பர் லெவல் 19
- காவலர் லெவல் 17
- துப்புறவாளர் லெவல் 10
- தொழில்நுட்ப உதவியாளர் (தொகுதிப்பூதியம்)
கல்வித் தகுதிகள்:
- இளநிலைப் பொறியாளர் பணிக்கு கட்டிடப் பொறியியலில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
- சீட்டு உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- பிளம்பர் பணிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் குழாய் தொழில் / குழாய் பணியர் பாடப்பிரிவில் வழங்கப்படும் தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய பிரிவில் ஐந்தாண்டுகள் அல்லது இரண்டாடுகள் தொழில் பழகுநர் அனுபவம் இருக்க வேண்டும்,
- காவலர் பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- துப்புறவாளர் பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு கட்டிடப் பொறியியல் பட்டய படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும். 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- இளநிலைப் பொறியாளர் - ரூ.35,900 - ரூ.1,13,500
- இளநிலைப் பொறியாளர் - ரூ.18,500 - ரூ.58,600
- சீட்டு விற்பனையாளர் - ரூ.18,500 - ரூ.58,600
- பிளம்பர் - ரூ.18,500 - ரூ.56,900
- காவலர் - ரூ.15,500 - ரூ.50,400
- துப்புறவாளர் - ரூ.10,000 - ரூ.31,500
- தொழில்நுட்ப உதவியாளர் (தொகுதிப்பூதியம்) - ரூ.15,000
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அஞ்சலிலோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://hrce.tn.gov.in/hrcehome/index.php - -என்கிற இணையதள முகவரியில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை ரூ.100 செலுத்தி நேரிலோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ விண்ணப்பங்களை பதிவிறகம் செய்து கொள்ளலாம்.
கவனிக்க..
- விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்
- விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.
- நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளுக்கு உட்பட்டவை.
- நன்னடத்தை உடையவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி உதவி ஆணையர் / செயல் அலுவலர்.
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்,
ஆனைமலை நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம் 642 104
விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.08.2023
இது தொடர்பான கூடுதல் தகவல்களை https://drive.google.com/file/d/1lnCxscetFmX7zqko4zXWbYVVxAEsbwPa/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.