மேலும் அறிய

CISF Recruitment 2022: மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

CISF Recruitment 2022: மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 540 உதவி சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 540 உதவி சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் இன்றைக்கே விண்ணப்பிக்கவும்.

 உதவி துணைக் காவல் ஆய்வாளர்( Assistant – Sub Inspector)  காவல்துறையின் தலைமை காவலர் (Head Constable – Ministerial) பணியிடங்கள் காலியாக உள்ளதென அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2 ஆயிரத்து 800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது.


மேலும் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் உதவி சப் – இன்ஸ்பெக்டர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதி தேவை? என அறிந்துக்கொள்ளலாம்.

மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கானத் தகுதிகள்:


CISF Recruitment 2022: மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

 

பணி விவரம்:

உதவி துணைக் காவல் ஆய்வாளர்(Assistant – Sub Inspector) 

காவல்துறையின் தலைமை காவலர் (Head Constable – Ministerial)

கல்வித் தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

துணைக் காவல் ஆய்வாளர்( Assistant – Sub Inspector) :  5 லெவல் ஊதிய வரைவின் படி  ரூ. 29,200 முதல் ரூ.92,300 வரை, தலைமை காவலர் பதவிக்கு (Head Constable – Ministerial)  ஊதிய வரை 4-வது வரைவின் படி, ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என்று வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
 

தேர்வு செய்யப்படும் முறை:

உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், திறனறிவுத் தேர்வு நடத்தபடும். மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.  எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://www.cisfrectt.in  என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இந்தப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.10.2022

அறிவிப்பின் முழு விவரம் அறிய https://www.cisfrectt.in/file_open.php?fnm=LR5CuwC4YuUvW3UDDOrF1tnhXTKZwaED5CYkol-ogO9nCM3od0FsM8QdnYjNAxPd3ZjyNd0Afhc16xkIDQ6Oo-LN4VxEM2a0SdRcmceZMU1TrjeW6PcNledJnyDVts7i என்ற லிங்கை செய்து பார்க்கவும்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்டத்தில் 122 செவிலியர் பணியிடங்கள்: வரும் அக்.26-க்குள் விண்ணப்பிக்கலாம்
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
காஞ்சிபுரத்தில் அரசு வேலைவாய்ப்பு! ரூ.25,000 வரை மதிப்பூதியம்… அக்டோபர் 21 கடைசி நாள்!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு: ரூ.45,000 சம்பளத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணி!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞரா நீங்கள்? மயிலாடுதுறையில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் விவரம் இதோ..!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
Anirudh - Kavya Maran: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. தேதியை நோட் பண்ணுங்க!
Embed widget